இந்திய அணிக்கு எதிராக நேற்று பிப்ரவரி 22-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் விளையாடியிருந்த தென்னாப்பிரிக்க அணியானது 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது. அதேவேளையில் இந்திய அணி அடைந்த இந்த படுமோசமான தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது.
இந்திய அணியை வீழ்த்த இதுவே காரணம் : எய்டன் மார்க்ரம் மகிழ்ச்சி
அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் மில்லர் 63 ரன்களையும், பிரேவிஸ் 45 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே குவித்தது. அதன்காரணமாக தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் : இதுவரை இங்கு ஆடிய மைதானங்களில் இந்த ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் அதனை முன்கூட்டியே புரிந்துகொண்ட எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப திட்டத்தையும் மாற்றி மிகச்சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.
இதையும் படிங்க : தேவையே இல்லாம எதுக்கு இதெல்லாம்.. திலக் வர்மாவின் ஆட்டத்தை விமர்சித்த – சுனில் கவாஸ்கர்
இந்த போட்டியின் ஆரம்பத்திலும் இறுதியிலும் இந்திய அணி மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்தனர். அந்த நேரத்தில் நாங்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடியிருந்தோம். அதிலும் குறிப்பாக மில்லர் மற்றும் பிரேவிஸ் ஆகியோர் மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மேலும் பவுண்டரிகள் வராத நேரத்தில் மைதானத்தில் பீல்டர்கள் இல்லாத இடத்தில் அடித்து ரன்களை ஓடி சேகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற பந்துவீச்சு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என எய்டன் மார்க்ரம் பேசியது குறிப்பிடத்தக்கது.



