நாங்க அடிவாங்க இது இந்தியா இல்ல – டி20 உ.கோ’யில் அசத்துவோம், இந்திய பவுலர்கள் சார்பில் அஷ்வின் உறுதி

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல முன்னதாகவே அங்கு பயணித்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முதலும் கடைசியுமாக கடந்த 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அதன்பின் கடந்த 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோஹித் சர்மா தலைமையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்குகிறது.

IND Japrit Bumrah

- Advertisement -

முன்னதாக கடந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்ற இந்தியா மினி உலகக் கோப்பையை போன்ற ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவுக்கு உள்ளானது. கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது அந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனாலும் அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க தொடரில் அதில் எந்த முன்னேற்றத்தையும் காணாமலேயே ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியாவிற்கு முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெளியேறியுள்ளது ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா அல்ல:
ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் ஆகியோர் 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசக்கூடிய மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். போதாகுறைக்கு மற்றொரு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் காயத்தால் விலகியதால் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் பலவீனமான பந்துவீச்சு துறையைக் கொண்ட அணியாக இந்த உலகக் கோப்பையில் இந்தியா களமிறங்குகிறது.

INDIA Arshdeep Singh Harshal Patel

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் ஆடுகளங்கள் அளவில் சிறியதாக இருந்ததால் இந்திய பவுலர்கள் அடி வாங்கியதாக தெரிவிக்கும் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெரிய மைதானங்களில் பயமின்றி தைரியமாக பந்துவீசி வெற்றிகரமாக செயல்படுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனெனில் பவுண்டரிகளின் அளவு பெரிதாக இருக்கும் போது எந்த பேட்ஸ்மேனும் பயமின்றி எளிதாக அடிக்க சற்று யோசிப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எங்களது சொந்த மண்ணில் நடந்த இருதரப்பு தொடர்களில் நாங்கள் திசை திருப்பப்பட்டிருக்கலாம். அங்கு மைதானத்தின் அனைத்து புறங்களிலும் இந்திய பவுலர்கள் அடிக்கப் பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்தியாவில் இருக்கும் மைதானங்களில் பவுண்டரி எல்லைகள் 30 யார்ட் வட்டத்துக்கு மிகவும் நெருக்கத்தில் உள்ளன. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களில் பவுண்டரிகளின் அளவு பெரிதாக இருக்கும் என்பதால் பவுலர்கள் சுதந்திரத்துடன் வேலை செய்ய முடியும்”

Ashwin

“ஏனெனில் இங்குள்ள பெரிய பவுண்டரிகளின் எல்லைக்கு ஏற்ப நீங்கள் 50 – 50 சான்ஸ் எடுத்து தைரியமாக பந்து வீச முடியும். அதுபோக ஆஸ்திரேலியாவில் நாங்கள் ஏற்கனவே விளையாடி நல்ல நினைவுகளை கொண்டுள்ளோம். அதிலும் கடைசியாக இங்கு நாங்கள் விளையாடிய போது முடிவு எங்களுக்கு சாதகமாக வந்தது. மேலும் இங்கு நிறைய வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் நாங்கள் விளையாடியுள்ளோம். அது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கிறது. கடந்த தசாப்தத்தில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் நிறைய விளையாடியுள்ளோம்”

- Advertisement -

“இருப்பினும் ஆஸ்திரேலிய சூழ்நிலைக்கு உடனடியாக எங்களை உட்படுத்திக் கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கு வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை இயற்கையாகவே கொண்ட தற்போது பயிற்சி எடுத்து வரும் பெர்த் மைதானத்தை விட வேறு நல்ல இடம் கிடைக்காது” என்று கூறினார்.

இதையும் படிங்க : நேரலையில் விராட் கோலியை விமர்சித்த ரமீஸ் ராஜாவை கலாய்த்த டிவி தொகுப்பாளர் – வைரல் வீடியோ உள்ளே

அதாவது கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் தொடரை 2வது முறையாக விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்றதாக தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 10 வருடங்களில் இங்கு விளையாடிய அனுபவம் இந்திய அணிக்கு நிறைய உள்ளதால் இங்குள்ள பெரிய மைதானங்களை பயன்படுத்தி நிச்சயமாக இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement