சுவாரசியத்தை அதிகரிக்க பிக்பேஷ் டி20 லீக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 3 புதிய மாற்றங்கள் – விவரம் இதோ

Bbl

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று உலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் போட்டி கடந்த பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஷ் டி20 லீக் தொடரில் அவ்வப்போது புதிய புதிய விதிகள் கொண்டுவரப்பட்டு கொண்டே இருக்கும். இந்த லீக் தொடர் தான் முதன்முதலாக ஜொலிக்கும் லைட் வைத்த ஸ்டம்புகளை பயன்படுத்தி கிரிக்கெட்டுக்கு கொடுத்தது.

BBl 1

தற்போது அதே போன்று புதிய மூன்று முக்கிய வீதிகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த விதியின் படிதான் பிக்பாஷ் தொடரில் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

1. பவர் சர்ஜ் (Power surge) :

தற்போதைய டி20 போட்டிகளில் முதல் 6 ஓவர்கள் தான் பவர்ப்ளே என்று விளையாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விதியின் மூலம் முதல் நான்கு ஓவர்கள் பவர் பிளே ஓவர்கள் என்று கருதப்படும். அதன் பின்னர் பேட்டிங் செய்யும் அணி 11 ஆவது ஓவருக்குப் பின்னர் இருபதாவது ஓவருக்குள் தங்களுக்கு எப்போது பவர் பிளே வேண்டுமோ அப்போது 2 ஓவரை தேர்வு செய்துகொள்ளலாம் இது பவர் சர்ஜ் என்று அழைக்கப்படும்.

- Advertisement -

2. முக்கிய காரணி வீரர் (X-factor player) :

இந்த விதியின் படி அணியில் வெளியில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் ஒரு மாற்று வீரர் போட்டியின் பாதிக்கு பின்னர் இரண்டு அணிகளிலும் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை வழிவகுக்கிறது. முதல் பத்து ஓவர் வீசப்பட்ட பின்னர் இந்த வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் மாற்றப்படும் பந்துவீச்சாளர் ஒரு ஓவருக்கு மேல் வீசிக்கூடாது பேட்ஸ்மேனாக இருந்தால் முன்னரே பேட்டிங் பிடித்து இருக்கக் கூடாது.

3. பாஷ் பூஸ்ட் (Bash boost) :

இது 10 ஓவர்களுக்குள் ஓர் அணி எவ்வளவு ரன்கள் அடிக்கிறது என்பதை பொறுத்து கூடுதலாக ஒரு புள்ளிகள் கொடுக்கப்படும். வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் தொடர்ந்து மூன்று புள்ளிகள் கொடுக்கப்பட்டு வரும். அதே நேரத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி தோல்வியடைந்தாலும் முதல் பாதி ஆட்டத்தில் அதாவது 10 ஓவர்களுக்குள் அந்த ஆட்டத்திற்கு ஏற்ப அதிக ரன்கள் குவித்து இருந்தால் அந்த அணிக்கும் ஒரு புள்ளி வழங்கப்படும்.