கலவரத்தில் வசமாக மாட்டிக்கொண்ட புவனேஷ் குமார் மற்றும் அவரது மனைவி ! – யார் காப்பாற்றியது தெரியுமா ?

kumar
- Advertisement -

தலீத்களுக்கான வன்கொடுமை சட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்ட திருத்தம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசை எதிர்த்து வட மாநிலங்களில் தன்னெழுச்சியான போராட்டாங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக கடந்த திங்கட்கிழமை மீரட் பகுதியில் பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியே கலவரபூமியாக காட்சியளித்தது.

bhuvneshwa

- Advertisement -

இந்நிலையில் திங்கட்கிழமை அன்று இந்த ஐபிஎல் சீசனில் விளையாட தனது அணியுடன் இணைய தனது மனைவியுடன் புறப்பட்டு சென்ற போது எதிர்பாராத விதமாக போராட்டகளத்தில் மாட்டிக்கொண்டார்.இதனால் புவனேஷ் குமார் விமானத்தை தவறவிட்டு விட்டார்.

எங்கு சென்று தங்களை காப்பாற்றி கொள்வது என்பது தெரியாமல் தவித்த புவனேஷ் குமார் தம்பதியினர் அருகிலிருந்த குருத்வாராவில் தஞ்சமடைந்தனர். இந்திய அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான புவனேஷ் குமார் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஏலத்தில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிட இந்த ஐபிஎல்-இல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Bhuvneshwar

பேட்ஸ்மேன் எதிர்பாராத நேரத்தில் பந்தை ஸ்விங் செய்வது மற்றும் அற்புதமான யார்க்கர்களை வீசுவது இவரது தனிச்சிறப்பு.இக்கட்டான சூழலில் குருத்வாராவில் தஞ்சமடைந்த புவனேஷ் குமார் அங்கேயே சுமார் 3மணி நேரம் தங்கியுள்ளார். 12மணியளவில் குருத்வாரா வந்தடைந்த புவனேஷ் குமார் 3மணியளவில் அங்கிருந்து கிளம்பி சென்றதாக குருத்வாரா கமிட்டியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட வேளையில் குருத்வாரா கோவிலில் தஞ்சமடைந்த புவனேஷ் குமாருக்கு நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டு நினைவு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.பின்னர் அங்கிருந்து பத்திரமாக கிளம்பிய புவனேஷ் குமார் தம்பதியினர் இக்கட்டான சூழலில் உதவிய குருத்வாரா கோவிலுக்கும் சீக்கிய சமூகத்தினருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரித்துக்கொண்டனர்.

Advertisement