பும்ரா இல்லாத குறையை இவரே போக்குவார். இந்திய அணியை பவுலிங்கில் வழிநடத்த போவது இவர்தான் – விவரம் இதோ

Bumrah

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மார்ச் 12-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த ஐந்து போட்டிகளுமே அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் போது பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு என்றே கூறலாம்.

இருப்பினும் அதனை ஈடுசெய்யும் அளவிற்கு நம் அணியில் பவுலிங் யூனிட் பிரமாதமாக உள்ளது என்றும் கூறலாம். பும்ரா இல்லாத இடத்தை நிரப்புவதற்காக சரியான ஆள் யாரென்று கேட்டால் அது நிச்சயம் புவனேஸ்வர் குமார் தான். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட காயத்தில் இருந்து அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

Bhuvi

இந்நிலையில் தற்போது தான் காயம் குணமடைந்து மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கும் அவரே இந்தியன் பவுலிங்கில் யூனிட்டை முன்னின்று வழி நடத்திச் செல்வார். அவருடன் தீபக் சாகர், ஷர்துல் தாகூர், சைனி ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஸ்பின்னர்களாகவும் பலம் சேர்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

bhuvi

அதேவேளையில் இந்த அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.