நான் கேப்டனாக செயல்பட்டாலும் இவரின் ஆலோசனைகளையே கேட்கிறேன் – புவனேஷ்வர் குமார்

Bhuvi
- Advertisement -

நேற்று மதியம் 4 மணிக்கு துவங்கிய 11 ஆவது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணி மற்றும் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரின் சதத்தால் 20 ஓவர்களில் முடிவில் 231 ரன்களை குவித்தது.

Srh

- Advertisement -

அதன்பிறகு 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 113 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக நபி 4 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய புவனேஷ்வர் குமார் : இந்த போட்டியில் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ அருமையாக ஆடி அணியை இமாலய இலக்கினை அடைய வைத்தனர். மேலும், சுழற்பந்துவீச்சாளரான நபி அருமையாக பந்துவீசி எதிரணியின் வீரர்களை திணறடித்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவருடைய பந்துவீசும் திறன் வெளியாகி உள்ளது. அவருக்கு மிகசிறந்த எதிர்காலம் உள்ளது.

Vijay-Shankar

வில்லியம்சன் இந்த போட்டியில் பங்கேற்காததால் நான் அணிக்கு மீண்டும் கேப்டனாக செயல்பட்டேன். இருப்பினும் வார்னரின் ஆலோசனைகளை தொடர்ந்து கேட்டு அதன்படியே செயல்படுகிறேன். அவரின் அனுபவம் எனக்கு முழுமையாக கைகொடுக்கிறது என்று புவனேஷ்வர் குமார் கூறினார்.

Advertisement