
ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 ரன்களை அடித்தார்.
பிறகு 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரராக பேர்ஸ்டோ 28 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். பிறகு ஆடிய மற்ற வீரர்கள் அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
இந்த போட்டி முடிந்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார் கூறுகையில் : ஒரு கேப்டனாக அணி வெற்றி பெறும்போது அது மகிழ்ச்சியினை தருகிறது. இந்த போட்டியில் டாஸ் வெல்லும்போது மைதானம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் சிறப்பாக பந்துவீசி டெல்லி அணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தினோம்.
அதன்பிறகு சேசிங் செய்யும்போது வழக்கம்போல் துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். அதனால் எங்களை அணி எளிதில் வெற்றி பெற்றது. ஒட்டு மொத்தமாக இது ஒரு சிறப்பான போட்டியாகவே அமைந்தது என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே :
DC vs SRH : பந்துவீச்சு தான் இப்படினா. த்ரோ கூடவா சரியாக அடிக்கமுடியாது – வீடியோ
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.