MI vs SRH : கடந்த மூன்று போட்டிகளில் நங்கள் வெல்லவும். நேற்று தோற்கவும் இதுவே காரணம் – புவனேஷ்வர் குமார்

ஐ.பி.எல் தொடரின் 19 ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின

Bhuvi
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 19 ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

Bhuvi

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி துவக்கத்தில் இருந்தே விக்கெட்டினை இழந்துவந்தது. மும்பை அணியின் பொல்லார்ட் மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். மத்தபடி யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆடவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

அதை தொடர்ந்து விளையாடிய சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் சீட்டுக்கட்டுபோல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை. மும்பை அணியின் அறிமுக வீரரான அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் சன் ரைசர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Alzarri

போட்டி முடிந்து தோல்வி குறித்தும் பேசிய புவனேஷ்வர் குமார் கூறியதாவது : இந்த போட்டியில் துவக்கம் சரியாகவே அமைந்தது. இருப்பினும், பொல்லார்ட் மும்பை அணி பக்கம் ஆட்டத்தை திரும்பிவிட்டார். எங்களது அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பிறகு, நாங்கள் பேட்டிங் செய்யும்போது துவக்க வீரர்கள் இந்த போட்டியில் சரியான துவக்கத்தினை தர தவறினர். வார்னர் மற்றும் பேர்ஸ்டோ கடந்த மூன்று ஆட்டங்களாக சிறப்பான துவக்கத்தினை தந்தனர். கடந்த மூன்று போட்டியின் வெற்றிக்கும் துவக்கம் முக்கிய பங்கு வகித்தது. இந்த போட்டியின் தோல்விகளும் இதுவே காரணமாக அமைந்தது.

Advertisement