இவருக்கு உண்மையில் பவர் அதிகம். அடிச்சாலே சிக்ஸ் போகுது. இவருக்கு பந்துவீசுவது கடினம் – புவனேஷ்வர் குமார் வெளிப்படை

Bhuvi
- Advertisement -

புவனேஸ்வர் குமார் இந்திய வேகப்பந்துவீச்சாளராக கடந்த 8 வருடங்களாக இருந்து வருகிறார்.மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2014ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 21 டெஸ்ட், 114 ஒருநாள் போட்டிகள் மற்றும் 43 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

Bhuvi

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் எந்த வீரருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் என்பது பற்றி பேசியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்..ஐபிஎல் தொடரின்போது நாம் எந்த மைதானத்தில் ஆடுகிறோம் என்பது கூட மிகவும் முக்கியமான விஷயம். ஏனெனில் மைதானம் சிறியதாக இருந்தால் பேட்ஸ்மேன்கள் மிக எளிதாக சிக்சர்களும் பவுண்டரிகளும் விளாசுவார்கள்.

இந்த போட்டியில் விளையாடும் போதும் பந்துவீசும் முன்னர் மைதானத்தில் அளவு குறித்த விழிப்புணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். அதேபோல எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீசி வரும் என்பதை ஒவ்வொரு பந்திலும் திட்டம் வகுக்க வேண்டும். ஆன்ட்ரே ரசல் மிகவும் வலுவான வீரர். அவர் சரியாக ஆடாத ஷாட்கள் கூட சிக்சருக்கு தான் சென்று விழும்.

Russell

நாம் அவருடைய ஆட்டத்தை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். அவருக்கு பந்துவீசும் போது நமக்கு அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். கடந்த சீசனின் போது அவருக்கு யார்கர்கள், ஸ்லோவர், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே என பல வித்தியாசமான பந்துகளை வீசினோம்.ஆனால் அனைத்தையும் அவர் சிக்சருக்கு விரட்டினார்.

- Advertisement -

இவருக்கு பந்து வீசுவது தான் மிகவும் கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார் புவனேஸ்வர் குமார். ஆந்த்ரே ரசல் கடந்த சில ஆண்டுகளாகவே கொல்கத்தா அணிக்காக தனி ஒரு ஆளாக இறுதி கட்டத்தில் காட்டடி அடித்து அவரது அணியை வெற்றிக்கு அழைத்து செல்வதை நாம் பார்த்து வருகிறோம்.

Russell

அந்த அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் அவரை பலரும் தங்களது சிறந்த ஐ.பி.எல் லெவன் அணியில் சேர்த்து வருகின்றனர். மேலும் புவனேஷ்வர் குமார் மட்டுமின்றி பல முன்னணி பந்துவீச்சாளர்களும் ரசலுக்கு எதிராக பந்துவீசுவது கடினம் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement