இவருடன் ஒன்றாக சேர்ந்து என் நேரத்தை கழிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – புவனேஷ்வர் குமார் வெளிப்படை

Bhuvi
Advertisement

இந்திய அணி தற்போது இலங்கை அணியுடனான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரானது ஜூலை 13ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் பயிற்சியாளராக டிராவிட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

dravid

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக எவ்வாறு செயல்படப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள புவனேஸ்வர் குமார் இந்த தொடர் குறித்து தனது கருத்தினை அறிவித்து உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஒரு மூத்த வீரராக அணியில் இருக்கும் அனைத்து இளம் வீரர்களுக்கும் என்னுடைய திறனையும் ஆலோசனையும் வழங்கி அவர்களை மெருகேற்றுவது எனது முக்கிய பணி என்றும் இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்றும் என்னுடைய முழு திறமையும் இந்த தொடரில் நான் வழங்குவேன் என்று கூறியிருந்தார்.

Bhuvi

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ராகுல் டிராவிட்டுக்கு எதிராக நான் விளையாடி உள்ளேன். அப்போதுதான் நான் ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான தருணம். அப்போது அவரிடம் நெருங்கி பேசும் அளவிற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது பயிற்சியாளராக அவர் இருக்கையில் நான் அவருடன் நெருங்கி பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.

bhuvi 2

அவருடன் இணைந்து பணியாற்ற மிகவும் விரும்பி இருக்கிறேன். இப்பொழுது அவர் பயிற்சியாளராக கிடைத்துள்ளது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான அணி தவான் தலைமையிலான அணியை தோற்கடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement