கோலி தலைமையில் நாம் ஐ.சி.சி கோப்பைகளை இதுவரை ஜெயிக்காததற்கு இதுவே காரணம் – புவனேஷ்வர் குமார் பேட்டி

Bhuvi-1
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது. அதன்பிறகு 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. அதன் பின்னர் தோனி தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற கோலி ஐசிசி தொடர்களுக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Champions trophy

- Advertisement -

கோலி தலைமையிலான இந்திய அணி 2016 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றை வெல்ல முடியாமல் நாடு திரும்பியது. இந்திய அணி இவ்வாறு ஐ.சி.சி தொடர்களை கைப்பற்ற முடியாதது குறித்து இ.எஸ்.பி.என் கிரிக்இன்போ என்ற இணையதளத்திற்கு புவனேஷ் குமார் பேட்டியளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இதுகுறித்து கூறுகையில் : 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை மட்டுமே இறுதியாக இந்திய அணி வென்றது. அதன் பின்னர் ஐசிசி நடத்தும் கோப்பைகளை இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. முக்கியமான இந்தத் தொடர்களில் இறுதி ஆட்டம், அரையிறுதி ஆட்டம் என்றும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

kohli2

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தோம். அதன்பிறகு கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் டாப் 3 வீரர்கள் விரைவாக ஆட்டம் இழந்ததால் அது தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் ஏழு ஆண்டுகளாக எங்களால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாததற்கு காரணமாக அதிர்ஷ்டம் இன்மையே முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.

- Advertisement -

மேலும் 250 ரன்களுக்கு கடந்த ஆண்டு அரையிறுதிப் போட்டியில் எதிரணியை சுருட்டியும் தோல்வி அடைவது என்பது எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும். அது ஒரு துரதிர்ஷ்டம் கடந்த முறை நாங்கள் உலககோப்பையை கைப்பற்ற அனைத்து வாய்ப்பும் இருந்தும் நாங்கள் தோல்வி அடைய அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லாததே காரணம் என்று புவனேஷ்குமார் கூறினார்.

rohith

மேலும் கடந்த உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா 6 சதங்களை விளாசி அதுமட்டுமின்றி கோலி, தோனி என சிறப்பாக ஆடி வந்தனர். ஏனோ எங்களுக்கு அரைஇறுதி போட்டி ஏமாற்றமாக அமைந்து விட்டது என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

Advertisement