எங்கு தவறு நடந்தது ? ஏன் கண்டுபிடிக்கல ? புவனேஷ்வர் குமாருக்கு ஆப்ரேஷன் – விவரம் இதோ

Bhuvi

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியின்போது வயிற்றுப் பகுதியில் கடும் வலியால் அவதிப்பட்டார். ஏற்கனவே சில மாதங்கள் ஓய்வில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பிய புவனேஸ்வர் குமார் உடனேயே மறுபடியும் காயம் அடைந்ததால் அவருக்கு தற்போது பரிசோதனை நடைபெற்றது.

Bhuvi-1

அந்த பரிசோதனையில் அவருக்கு குடலிறக்கம் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த காரணத்தினால் அவருக்கு ஆபரேஷன் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. அவ்வாறு ஆபரேஷன் செய்தால் அவர் அணிக்கு திரும்புவதில் சிக்கல் உண்டாகும். கடந்த 2018 ஆண்டில் புவனேஸ்வர் குமார் அடிக்கடி காயத்தில் சிக்கினார்.

அப்போது முதல் அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகடமியின் கண்காணிப்பில் இருந்தாலும் அவரது காயத்திற்கான எந்த ஒரு சரியான காரணத்தையும் தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவக்குழு கண்டறியவில்லை அனைத்து பரிசோதனைகளையும் புவனேஸ்வர் குமார் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று முடிவுகள் வெளியாகின.

bhuvi

ஆனால் தற்போது அவருக்கு இந்த குடல் இறக்கம் பாதிப்பு எப்படி வந்தது என்பது அணி நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து புவனேஷ்வர் குமார் பேசுகையில் : இந்த பாதிப்பில் இருந்து நான் எப்பொழுது குணமடைந்து உடல்தகுதி எட்டி கிரிக்கெட் களத்திற்கு திரும்புவேன் என்று தெரியவில்லை. தேசிய கிரிக்கெட் அகடமியில் முடிந்த அளவுக்கு சிறந்தவற்றையே செய்கிறது.

- Advertisement -

bhuvi

ஆனால் எங்கு தவறு நடந்தது ஏன் இந்த பாதிப்பை முன்கூட்டியே கண்டறியவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் பேச வேண்டும் என்று புவனேஸ்வர் குமார் வேதனையுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.