கொரோனா அதிகமாயிடுச்சி. ப்ளீஸ் நாளைக்கு யாரும் இதை செய்யாதீங்க. வீரர்களுக்கு வேண்டுகோள் வைத்த – புவனேஷ்வர் குமார்

Bhuvi-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தர்மசாலா நகரில் துவங்க உள்ளது. இந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இந்தியா வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ind

- Advertisement -

இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏகப்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு நாடுகளை தற்போது தீவிரமாக அச்சுறுத்தி வருகிறது.

சீனா மட்டுமின்றி உலக அளவில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலும் இதுவரை 40 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் இதில் உயிரிழந்த தகவலும் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த வைரசினால் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

ind vs sa

இந்நிலையில் தற்போது தர்மசாலாவில் பயிற்சிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கலந்து கொண்டார். அதில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் கொரோனா குறித்தும் அவர் பேசியுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக பந்துவீச்சாளர்கள் யாரும் பந்தில் எச்சில் துப்பாதீர்கள். அப்படி துப்புவதை இந்திய வீரர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். பொதுவாக பந்தினை எச்சில் துப்பி அதனை தேய்த்து பளபளப்பாக வைத்துக் கொள்வதை பந்துவீச்சாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் பந்து பளபளப்பாக இருந்தால்தான் கூடுதல் வேகம் மற்றும் ஸ்விங் கிடைக்கும். இதனால் அடிக்கடி எச்சில் விட்டு பந்தை பந்துவீச்சாளர்கள் பளபளப்பாக வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எனவே எந்த அசம்பாவிதங்களும் தற்போதைய சூழ்நிலையில் நடக்கக்கூடாது என்ற காரணத்தினால் பந்தில் எச்சில் விட்டு பளபளப்பாக வைக்கவேண்டாம் என்று புவனேஸ்வர் குமார் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கொரோனா வைரஸ் குறித்து குறிப்பிடுகையில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் யாரும் இந்திய வீரர்களுக்கு கை குலுக்குதல் கூடாது அவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement