இந்த ஒரு விதியால் பந்துவீச்சாளர்கள் அழிவை சந்திப்பார்கள். ஐ.சி.சி யின் புதிய விதிமுறை குறித்து பேசிய – புவனேஷ்வர் குமார்

Bhuvi-1
- Advertisement -

கொரோனா வைரஸ் எச்சில் மூலம் பரவுகிறது என்பதற்காக ஐசிசி இனிமேல் பந்தில் எச்சில் தடவக் கூடாது என்ற விதியை அமல்படுத்தியுள்ளது. பந்தில் எச்சில் தடவிதான் பந்தை பளபளப்பாக்கி வீரர்கள் ஸ்விங் செய்துவந்தனர். இதனால் பந்து வீச்சாளர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்கும் என்று தெரிகிறது .

Bhuvi

- Advertisement -

ஏற்கனவே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விதிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் பந்து வீச்சாளர்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பேசியுள்ளார். அவர் கூறுகையில்..

இந்த விதியால் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அவர்கள் இப்படி ஒரு விதி வந்துவிட்டால் பந்தை வேகமாகத்தான் விசா பார்ப்பார்கள். ஆனால் ஸ்விங் பந்து வீசும் பந்துவீச்சாளர்களுக்கு இது மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். இது அவர்களுக்கு பின்னடைவு.

bhuvi

பந்து ஸ்விங் ஆகாவிட்டால் பேட்ஸ்மேன்கள் பட்டையை கிளப்பி விடுவார்கள். இங்கிலாந்து மண்ணில் விளையாடும்போது அங்கு பந்தினை எளிதாக ஸ்விங் செய்ய முடியும். ஆனால் 15 ஓவர்களை கடந்து விட்டால் பந்து பழையதாக மாறிவிடும். அந்த நேரத்தில் எச்சில் தடவி தான் ஸ்விங் செய்ய முடியும். இதனால் என்னை போன்ற பந்துவீச்சாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

Bhuvi

எச்சில் தடவுவதை கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக மாறி இருந்தது. இந்த விதி பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த போகிறது .மேலும் எச்சில் தடவ அனுமதி இல்லை என்றால் வியர்வையை தேய்க்க வேண்டும் ஆனால் குளிர்காலத்தில் வீரர்களுக்கு வியர்வை வராது. அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் புவனேஸ்வர் குமார்.

Advertisement