IND vs RSA : 4 ஆவது போட்டியில் மிகப்பெரிய சாதனையை தவறவிட்ட புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ

Bhuvi
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருவது. இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் 2 க்கு 1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்று இருக்கிறது.

INDvsRSA

இந்நிலையில் 4-வது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்ற முனைப்புடன் தென்ஆப்பிரிக்கா அணியும், இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியில் விளையாடி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மிகப்பெரிய சாதனை ஒன்றினை தவற விட்டுள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக திகழும் புவனேஸ்வர் குமார் பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்வதில் வல்லவர்.

bhuvi 1

அப்படி போட்டியின் துவக்க ஓவர்களிலேயே அதாவது பவர்ப்ளே ஓவர்களிலேயே பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்ட புவனேஸ்வர் குமார் உலக அளவில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டிம் சவுதி மற்றும் சாமுவேல் ஆகியோரது சாதனையுடன் சமன் செய்து இருந்தார்.

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை பவர்பிளே ஓவர்களில் மட்டும் முப்பத்தி மூன்று (33) விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் டிம் சவூதி மற்றும் சாமுவேல்ஸ் ஆகியோரது சாதனையுடன் சமன் செய்து இருந்தார். இந்நிலையில் இன்று நான்காவது டி20 போட்டியில் பவர் பிளே ஓவர்களில் ஒரு விக்கட் எடுத்தால் கூட அந்த சாதனையை அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : ஒன்றல்ல.. இரண்டல்ல.. 4 பேர் வெயிட்டிங்ல இருக்காங்க. ரிஷப் பண்டினை எச்சரித்த – இர்பான் பதான்

ஆனால் இன்று அவர் பிளே ஓவர்களில் 2 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 8 விட்டுக் கொடுத்ததால் மிகப்பெரிய சாதனையை தவற விட்டுள்ளார். இருப்பினும் இனிவரும் தொடர்களில் நிச்சயம் அவர் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் எடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற சாதனையைப் படைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement