எனது பந்துவீச்சில் இப்போது நான் செய்துள்ள மாற்றம் இதுதான். இனிமேல் அசத்தல் தான் – புவனேஷ்வர் குமார் நம்பிக்கை

Bhuvi
- Advertisement -

உலகம் முழுவதிலும் உள்ள வெவ்வேறு வகையான பிட்ச்கள் மற்றும் மைதானங்களில் அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப பந்துகளை வேகமாக வீசுவதில் இந்திய பந்துவீச்சாளர்கள் வல்லவர்கள் என்று அறியப்படவில்லை. இருந்தாலும் அந்த மைதானங்களுக்கு ஏற்றார்போல் வேகத்தை மாற்றி ஸ்விங் செய்து வீசுவதில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

Bhuvi-1

- Advertisement -

அந்த வரிசையில் ஸ்விங் பவுலிங்க்கு பேர்போன இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் தனது கிரிக்கெட் வழங்கி துவங்கிய போது தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் ஆரம்ப காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அவர் தனது கேரியரை சிறப்பாக ஆரம்பித்தார்.

அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டாலும், அவரின் பந்துவீச்சை அடித்து ஆட பேட்ஸ்மேன்கள் கற்றுக் கொண்டதால் அவர் தனது பந்துவீச்சை மேம்படுத்தி ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். மேலும் இது குறித்து பேசிய புவனேஸ்வர் குமார் நான் ஸ்விங் பந்து வீச்சினை சிறப்பாக எனது ஆரம்ப காலகட்டத்தில் வீசினேன் என்றாலும் பிறகு சில காலத்தில் எனது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் அடிக்கத் துவங்கினார்கள். அதன் பிறகு நான் எனது பந்துவீச்சை மாற்ற நினைத்தேன் என்று கிரிக்பஸ் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

bhuvi

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் அறிமுகமான போது எனது ஸ்விங் பந்து வீச்சின் மூலம் சிறப்பாக வீசினேன். அதற்கு காரணம் ரஞ்சித் தொடரில் நான் அவ்வாறே வீசியதால் தொடர்ந்து அதே போன்று பயணித்தேன். ஆரம்ப கால கட்டத்தில் எனது பந்துவீச்சில் நிறைய விக்கெட்டுகள் விழுந்தாலும் அதன் பிறகு என்னை பேட்ஸ்மென்கள் கணித்து அடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு நான் எனது பவுலிங்கில் மாற்றம் செய்ய நினைத்தேன். மேலும் எனது பந்துவீச்சு பலவீனம் அடைந்ததை நான் ஒத்துக்கொள்கிறேன்.

- Advertisement -

அதன் பிறகு தான் என்னுடைய பந்துவீச்சில் வேகத்தை அதிகரித்தேன். ஆனால் என்னால் அந்த வேகத்தை சரியாக பிடிக்க முடியவில்லை. ஏனெனில் நான் வீசும் பொழுது உடல் எடை அதிகமாக என் மீது விழுவதை உணர்ந்தேன். அதன்பிறகு சில காயங்கள், உடல் சுமை என பெரிதும் பாதிக்கப்பட்ட நான் தற்போது மீண்டும் பயிற்சியின் மூலம் எனது சிறப்பான பந்து வீச்சுக்கு திரும்பி உள்ளேன் .தற்போது உள்ள கிரிக்கெட்டில் நாளுக்கு நாள் நமது பந்துவீச்சில் மாற்றத்தை கொண்டு வந்தால் தான் நாம் சிறப்பாக செயல்பட முடியும்.

Bhuvi

நான் கடந்த சில தொடர்களாக சந்தித்த சறுக்கல்களை தற்போது எனது வேகத்தின் மூலம் சரிசெய்து உள்ளேன். எனது வேகத்தை இப்போது கூட்டி உள்ளதால் அதுவே எனது பந்துவீச்சை தற்போது மேம்படுத்தி உள்ளது. மேலும் தற்போது தான் சிறப்பாக பந்துவீசி தயாராக உள்ளேன் இனிவரும் போட்டிகளில் எனது ஸ்விங் மற்றும் வேகத்தால் அசத்துவேன் என்று தனது குறை மற்றும் நிறைகளை புவனேஸ்வர் குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement