IND vs IRE : அயர்லாந்திலும் அசத்திய நம்ம புவி – சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலகசாதனை

Bhuvaneshvar Kumar
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உட்பட முக்கிய வீரர்கள் ஜூலை 1இல் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதால் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகவும் கேப்டனாகவும் செயல்பட்டு ஐபிஎல் 2022 கோப்பையை வென்று சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் அற்புதமான கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக செயல்படுகிறார். அந்த நிலைமையில் ஜூன் 26-ஆம் தேதியான நேற்று தலைநகர் டப்ளின் நகரில் இருக்கும் மலஹைட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

chahal deepak hooda IND vs IRE

- Advertisement -

இந்தியாவுக்கு அனைவரும் எதிர்பார்த்த உம்ரான் மாலிக் ஒரு வழியாக அறிமுகப் போட்டியில் களமிறங்கினார். ஆனால் ஆரம்பத்திலேயே குறுக்கிட்ட மழை போட்டியை ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தியது. அதனால் இரவு 11.20 மணிக்கு தலா 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக துவங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்துக்கு பால் ஸ்டெர்லிங் 4 (5) ஆண்டி பால்பிரின் 0 (2) கெரத் டிலேணி 8 (9) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார்.

இலக்கு 109:
அதனால் 22/3 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த டெக்டர் மற்றும் டூக்கர் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை குவித்தனர். 4-வது விக்கெட்டுக்கு முக்கியமான 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் டூக்கர் 18 (16) ரன்களில் ஆட்டமிழந்தாலும் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டலாக பேட்டிங் செய்த டெக்டர் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 64* (33) ரன்கள் குவித்து சூப்பர் பினிசிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் அயர்லாந்து 108/4 ரன்கள் சேர்க்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் கேப்டன் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஆவேஸ் கான், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Bhuvi 1

அதை தொடர்ந்து 109 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு லேசான காயமடைந்த ருதுராஜ்க்கு பதில் தீபக் ஹூடா – இஷான் கிசான் ஆகியோர் ஓபனிங் ஜோடியாக களமிறங்கியது. அதில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் இஷான் கிசான் 26 (11) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக வந்த நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 30/2 என சுமாரான தொடக்கம் பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஹூடாவுடன் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
1 பவுண்டரி 3 சிக்சருடன் 24 (12) ரன்களை அதிரடியாக எடுத்து கடைசி நேரத்தில் பாண்டியா ஆட்டமிழந்தாலும் மறுபுறம் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அசத்திய தீபக் ஹூடா கடைசி வரை அவுட்டாகாமல் 47* (29) ரன்கள் எடுத்தார். அவருடன் தினேஷ் கார்த்திக் 5* (4) ரன்கள் எடுத்ததால் 9.2 ஓவரிலேயே 111/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக வில் எங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த சிறப்பான வெற்றியால் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா தொடரை வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Bhuvi 2

இந்த வெற்றியில் அனைவரும் பங்காற்றியிருந்தாலும் 3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை 3.67 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்த யுஸ்வென்ற சஹால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் 3 ஓவர்களில் 1 மெய்டன் ஓவர் உட்பட 16 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை 5.33 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்துவீசிய சீனியர் புவனேஸ்வர் குமார் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே கூறலாம்.

- Advertisement -

உலகசாதனை:
ஏனெனில் அவரைத் தவிர எஞ்சிய அனைத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் குளிரான அயர்லாந்து கால சூழ்நிலையில் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினர். ஆனால் பெரும்பாலும் இந்திய ஆடுகளங்களில் விளையாடினாலும் அயர்லாந்துக்கு சென்றதும் உடனடியாக அந்த கால சூழ்நிலைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு அற்புதமாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் மீண்டும் ஒருமுறை தனது தரத்தையும் அனுபவத்தையும் துல்லியத்தை நிரூபித்துள்ளார்.

Bhuvi

1. அதிலும் இப்போட்டியில் முதல் ஓவரிலேயே அயர்லாந்து கேப்டன் ஆண்டி பால்பிரினை கிளீன் போல்டாக்கிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர்ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. புவனேஸ்வர் குமார் : 34* விக்கெட்கள்
2. டிம் சௌதீ : 33 விக்கெட்கள்
3. சாமுவேல் பத்ரி : 33 விக்கெட்கள்
4. சாகிப் அல் ஹசன் : 27 விக்கெட்கள்
5. ஜோஸ் ஹேசல்வுட் : 26 விக்கெட்கள்

இதையும் படிங்க : IND vs IRE : முதல் டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஏன் ஓப்பனிங்கில் களமிறங்கவில்லை – கேப்டன் விளக்கம்

2. அதுவும் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்த அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை எடுத்து ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. புவனேஸ்வர் குமார் : 13*
2. ஏஞ்சலோ மேத்யூஸ் : 12

Advertisement