சன் ரைசர்ஸ் அணிக்கு ஏற்பட்ட அடுத்த அடி. முக்கிய வீரர் விளையாடுவதில் சிக்கல் – விவரம் இதோ

Srh
- Advertisement -

ஐபிஎல் தொடரில் தற்போது அடுத்தடுத்து வீரர்கள் காயம் அடைந்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பல வீரர்கள் தொடரில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி வெளியேறிவிட்டனர். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற நட்சத்திர வீரர்கள் கூட கலந்து கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடர் துவங்கியவுடன் சில வீரர்கள் காயம் ஏற்பட்டது லசித் மலிங்கா தொடரில் கலந்து கொள்ளாமல் வெளியேறிவிட்டார்.

srh

- Advertisement -

அடுத்தடுத்து வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு வரும் இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் அடைந்து இருக்கிறா.ர் இதனால் அந்த அணி கவலை அடைந்து இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது

இந்த போட்டியில் சென்னை அணி வெறும் 165 ரன்கள் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மிகச் சிறப்பாக பந்து வீசினார். 19-வது ஓவரை வீசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு கணுக்காலில் சற்று வலி ஏற்பட்டது.

bhuvi

ஆனாலும் சிகிச்சை எடுத்துக் கொண்டு பந்து வீச முற்பட்டார். இருப்பினும் அவரால் வீச முடியவில்லை என்று வெளியேறிவிட்டார். கடந்து போட்டியிலும் டெல்லி அணிக்கு எதிராக 15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல் நேற்றும் வாட்சன் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் 3 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.

Bhuvi

இப்படி மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் புவனேஸ்வர் குமார் காயம் அடைந்து விட்டதால் ஹைதராபாத் அணி சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பின்னர் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு காரணம் புவனேஷ்வர் குமார் இந்நிலையில் அவரது காயம் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இன்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement