- Advertisement -
ஐ.பி.எல்

SRH vs KXIP : பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் செய்தும் சிக்ஸர் கொடுத்த புவி – வீடியோ

நேற்று நடந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி விளையாடும்போது அந்த வீரரான பூரான் கலீல் அகமது பந்தில் தூக்கி அடித்தார். அந்த பந்து பவுண்டரி லைனுக்கு சென்றது அந்த பந்தினை பவுண்டரி லைனில் இருந்த புவனேஷ்வர் குமார் அபாரமாக எகிறி பிடித்தார். ஆனால், கேட்ச் பிடித்த பின்னர் சிக்ஸ் லைனை தாண்டி கால் வைத்தார். அதனால் அதனை சிக்ஸ் என்று நடுவர் அறிவித்தார். இதோ அந்த வீடியோ :

ஐ.பி.எல் தொடரின் 48 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் aவில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக வார்னர் 81 ரன்களும், மனிஷ் பாண்டே 36 ரன்களையும் குவித்தனர்.

இதனால் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 79 ரன்களை அடித்தார். இதனால் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -
Published by