சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர், வில்லியம்சன் என யாருமில்லை – இவர்தான்

Srh
- Advertisement -

இந்தியாவில் 12ஆவது ஐபில் போட்டிகள் நேற்று சென்னையில் துவங்கின. நேற்று நடந்த முதலாவது போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை எளிதாக சுருட்டி வெற்றிபெற்றது.

Kkr-vs-Srh

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது போட்டியாக சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இப்போது துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இந்த டாசில் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தார். எனவே, தற்போது சன் ரைசர்ஸ் அணி களமிறங்க தயாராகி வருகிறது.

இன்றைய டாசில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது. இன்றைய டாஸின் போது சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வந்தவர் யார் தெரியுமா ? அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் ஆவார்.

srh

சன் ரைசர்ஸ் அணியில் வார்னர் மற்றும் வில்லியம்சன் போன்றோர் இருக்கையில் புவனேஷ்வர் குமாரிடம் கேப்டன்ஷிப் கொடுத்தது அனைவரையும் வியக்க வைத்தது.

Advertisement