பலமாக தாக்கிய பீமர் பந்து. நிலைகுலைந்து கீழே விழுந்த ரஸ்ஸல் – வீடியோ

Russell
- Advertisement -

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி அணி விளையாடியது. அப்போது டெல்லி அணி வீரரான ஹர்ஷல்பட்டேல் வீசிய பந்தில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரரான ரஸ்ஸல் நிலை தடுமாறி கீழே விழுந்து வழியால் துடித்தார். புள் டாஸாக வீசப்பட்ட அந்த பந்து ரஸ்ஸலின் தோள்பட்டையின் மீது பலமாக தாக்கியது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 10 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச டெல்லி முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை அடித்தது. கொல்கத்தா அணி சார்பாக 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார்.

பிறகு ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் சரியாக 185 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பில் துவக்க வீரர் பிரிதிவி ஷா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 99 ரன்களை குவித்தார். இதனால் போட்டி டை ஆனது. பிறகு வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி 10 ரன்களை குவித்தது. பிறகு கொல்கத்தா அணியால் 7 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

Advertisement