சூப்பர் ஓவரும் டை ஆனால் இந்த பவுண்டரி ரூல்ஸ் வேணாம் இதோ இருக்கு புதிய விதி – ஐ.சி.சி க்கு ஐடியா கொடுத்த இந்திய கோச்

- Advertisement -

நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்கள் அடித்ததால் போட்டி டை ஆனது. பின்னர் சூப்பர் ஓவரும் டை ஆனதால் நடுவர்கள் எந்த அணி அதிக பவுண்டரிகள் அடித்தது என்பதை கணக்கில் கொண்டு இங்கிலாந்து அணியை வெற்றி பெற்ற அணியாக அறிவித்தது.

England

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இந்த விதி குறித்து பலரும் பல விமர்சனங்களை பலரும் முன்வைத்து வந்தனர். சச்சின் கூட சூப்பர் ஓவர் சமநிலையில் முடிந்தால் மற்றொரு சூப்பர் ஓவரை வைத்திருக்கலாம் என்று தனது கருத்தினை கூறினார். இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் இந்த விதி குறித்து பேசுகையில் கூறியதாவது :

போட்டி சமநிலை அடைந்தவுடன் சூப்பர் ஓவர் வீசப்படும் அவ்வாறு சூப்பர் ஓவர் வீசப்படும்போதும் போட்டி சமநிலை அடைந்தால் பவுண்டரிகளை வைத்து அணிகளை மதிப்பிடுவதை விட அதிக விக்கெட்டுகளை தன்வசம் வைத்திருக்கும் அணியே வெற்றி பெற்ற அணி என்று அறிவிக்க வேண்டும்.

newzeland

ஏனெனில் ரன்களை அடிப்பது மட்டுமல்ல விக்கட்டுகளை இழக்காமல் கையில் வைத்திருக்க வேண்டும் அதுவும் போட்டிக்கு முக்கியம். எனவே இனிவரும் காலங்களில் பவுண்டரி விதிக்கு பதிலாக அதிக விக்கெட்டுகளை கையில் வைத்திருக்கும் அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்க வேண்டும் என்ற இந்த விதியைப் மறுபரிசீலனை செய்யலாம் என்று அவர் ஐ.சி.சி க்கு ஐடியா கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement