- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பனிப்பொழிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.. அதனால் இந்த டிரெய்னிங்கை வீரர்கள் செய்யனும் – பரத் அருண் கருத்து

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது.

இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய : பரத் அருண்

அதோடு சொந்த மண்ணில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதால் இம்முறையும் இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும், பயிற்சியாளர்களும் இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் எதிர்வரும் இந்த உலக கோப்பை தொடருக்கும் முன்னதாக சில அறிவுரைகளை நமது அணிக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கௌதம் கம்பீர் வீரர்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை தருவார். அதுமட்டும் இன்றி ஒரு பயிற்சியாளராக அவர் கடினமான டாஸ்க்குகளை கொடுக்கக்கூடிய ஒரு மாஸ்டர். அதிலிருந்து அவர் எப்போதும் பின்வாங்க மாட்டார்.

போட்டிகளின் போது உங்களது உங்களுக்கு தேவையான சரியான திட்டங்களை அவர் தொகுத்துக் கொடுப்பார். அதை நீங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். ஆனால் இந்திய அணிக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை யாதெனில் பனிப்பொழிவு தான். போட்டியின் போது பனிப்பொழிவு ஏற்படும் பட்சத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அதற்காக நாம் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

இதையும் படிங்க : பயிற்சி போட்டியின் போது காயமடைந்து வெளியேறிய இந்திய அணியின் இளம்வீரர் – விவரம் இதோ

அந்த வகையில் பனிப்பொழிவை சமாளித்து விளையாடுவதற்காக ஈரமான பந்துகளுடன் பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் சில பேட்ஸ்மேன்கள் பேட் சேதமடையும் என்று அந்த பயிற்சியை செய்ய மாட்டார்கள். என்னை பொறுத்தவரை ஈரமான பந்தில் பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதுமட்டும் இன்றி பந்துவீச்சாளர்களும் ஈரமான பந்தினை வைத்து வீசும்போது தான் எப்படி டியூ இருந்தால் பந்தை கிரிப் செய்து வீசுவது, எந்த இடத்தில் எந்த வேகத்தில் வீசலாம்? என்பதை கற்றுக்கொள்ள முடியும் என பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -