இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நாவி மும்பை நகரில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதான பயிற்சி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.
காயத்தை சந்தித்த இந்திய அணியின் இளம்வீரர் :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
இதனால் 30 ரன்களில் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. ஆனாலும் இந்த போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியது அனைவரது மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் காயத்தை சந்தித்து தற்போது தான் அணிக்கு திரும்பியுள்ள வேளையில் மீண்டும் ஒரு வீரர் காயமடைந்துள்ளது அணியின் நிர்வாகத்திற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு ஓவர் மட்டும் வீசிய ஹர்ஷித் ராணா 16 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனின் இடம் காலி.. வெளிப்படையாகவே தனது ஆசையை வெளிப்படுத்திய – இஷான் கிஷன்
அவ்வேளையில் அந்த ஒரு வீசுவதற்கே இரண்டு முறை முழங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தடுமாற்றத்துடன் பந்துவீசி இருந்தார். அந்த ஒரே ஒரு ஓவருடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் பந்துவீச களத்திற்கு வரவே இல்லை. இதன் காரணமாக அவரது காயம் சிக்கலை உண்டாக்குமோ? என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



