பும்ராவின் ஃபிட்னெஸ் பற்றி தெரியாம பேசாதீங்க.. விராட் மாதிரி அதையெல்லாம் தியாகம் செஞ்சாரு.. பரத் அருண்

Bharat Arun
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் சிறப்பாக விளையாடியும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் 5 போட்டிகளில் முழுமையாக விளையாடினார். அத்தொடரில் தடுமாற்றமாக பவுலிங் செய்த மற்ற பவுலர்களுக்கும் சேர்த்து முழுமூச்சுடன் பந்து வீசிய அவர் 32 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார்.

அதனாலேயே கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதனால் இங்கிலாந்தில் தம்மால் முழுமையாக 5 போட்டிகளில் விளையாட முடியாது என்று பும்ரா ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார். அதன் படி விளையாடிய 3 போட்டிகளில் அவர் 2 முறை 5 விக்கெட்டுகள் எடுத்தும் இந்தியா வெற்றி பெறவில்லை.

- Advertisement -

தெரியாம பேசாதீங்க:

அதன் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ராவின் பணிச்சுமை மற்றும் ஃபிட்னஸ் குறித்து இந்தியாவை சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழும் விராட் கோலியை போலவே ஜஸ்ப்ரித் பும்ராவும் ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பதாக முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். அதற்காக தமக்குப் பிடித்த உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகளை பும்ரா தியாகம் செய்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி மும்பையில் செய்தியாளர்களிடம் அருண் பேசியது பின்வருமாறு. “2013ஆம் ஆண்டு முதல் முறையாக ஜஸ்ப்ரித் பும்ரா அண்டர்-19 முகாமிலிருந்து என்சிஏ வந்தார். அங்கே அணிக்காக விளையாட தேர்வாகாத அவருக்கு 30 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் தேர்வாகும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய திறமையைப் பார்த்த நாங்கள் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த நீங்கள் காளை போல இருக்க வேண்டுமென்று அவரிடன் சொன்னோம்”

- Advertisement -

விராட் கோலி போல:

“அது உணவு கட்டுப்பாடு, உடல்பயிற்சி, தியாகம் போன்றவைகளால் தான் கிடைக்கும். நியாயமான முறையில் பும்ராவும் அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக மாற்றங்களைச் செய்தார். சத்துள்ள உணவுகளை சாப்பிடத் துவங்கிய அவர் உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்தார். விராட் கோலி போலவே அவரும் சிறந்த ஃபிட்னஸ் கடை பிடிப்பதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்”

இதையும் படிங்க: ரசிகர்கள் திட்டுவாங்கன்னு தெரிஞ்சே பாண்டியா அதை செஞ்சாரு.. யாரையும் ரோஹித் தூண்டி விடல.. ராஜிவ் சுக்லா

“பர்கர், ஃபீசா, மில்க்ஷேக் போன்ற உணவுகளை விரும்பக்கூடிய அவர் நாங்கள் சொன்ன காரணத்தால் அவற்றை ஒரே நாள் இரவில் விட்டார். குஜராத்தில் வாழும் ஒரு பஞ்சாபி பையனான அவர் தமக்குப் பிடித்த உணவுகளை விட வேகப்பந்து வீச்சின் மீது அதிகமான விருப்பத்தை வைத்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement