- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜஸ்ப்ரித் பும்ரா 5 போட்டியிலும் விளையாட.. இந்த 2 விஷயத்தை செஞ்சா போதும்.. பரத் அருண் அறிவுரை

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது. ரோஹித், விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் இம்முறை இந்திய அணி இங்கிலாந்தில் வெல்ல வேண்டுமெனில் அதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக விளையாடுவது அவசியமாகிறது.

ஆனால் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் காயத்தைச் சந்தித்து குணமடைந்துள்ள அவரால் முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். மேலும் காயத்தைத் தவிர்ப்பதற்காக பும்ரா 3 போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவுக்காக 5 போட்டிகளிலும் விளையாடுவதற்கு முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆலோசனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

5 போட்டிகளிலும் விளையாட:

அதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா வலைப்பயிற்சியில் குறைந்த ஓவர்களை வீச வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் புத்துணர்ச்சிப் பயிற்சிகளை அதிகமாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதிகப்படியாக பவுலிங் செய்வதும் குறைவாக பந்து வீசுவதும் காயத்தைக் கொடுக்கும். அவை இரண்டுமே காயத்திற்கு வித்திடக்கூடிய செய்முறையாகும்”

“ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு போட்டியில் எவ்வளவு ஓவர்கள் பௌலிங் செய்வார் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எவ்வளவு ஓவர்கள் வீசப்படுகிறது என்பதைப் பொறுத்து பயிற்சியில் வீசப்படும் ஓவர்களைக் குறைக்கலாம். அதற்கு பதிலாக உடற்பயிற்சி கூடத்தில் அவர் புத்துணர்ச்சி பெறுவதற்கானப் பயிற்சிகளை உடற்பயிற்சியாளர்களுடன் சேர்ந்து எடுக்கலாம். அவரை கையாள்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும்”

- Advertisement -

பவுலிங் கோச் அறிவுரை:

“ஏனெனில் பும்ரா இருப்பது நம்முடைய அணிக்கு மிகப்பெரிய மதிப்பை சேர்க்கும். அவர் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி மற்றவர்களையும் நன்றாக செயல்பட வைப்பார். ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியில் இருப்பது மற்ற வீரர்களுக்கும் தன்னம்பிக்கையை கொடுத்து சிறப்பாக செயல்பட வைக்கும். அதனால் அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்”

இதையும் படிங்க: பந்தை சேதப்படுத்தி ஏமாற்றி வென்ற அஸ்வின் அணி? புகாரளித்த மதுரையை எச்சரித்த டிஎன்பிஎல் நிர்வாகம்

“அதற்கு மற்ற பலர்களிடமும் ஆதரவு கிடைக்க வேண்டும். அதிகப்படியான பணிச்சுமையை எடுத்துக்கொண்டால் அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடத் தயாராக இருக்க மாட்டார். எனவே பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடுவதற்கு மற்ற பவுலர்களின் உதவி முக்கியமானதாக இருக்கும். ஒருவேளை அவர் 3 போட்டிகளில் மட்டும் விளையாடினால் அதை சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் முடிவெடுக்கலாம். மற்ற பவுலர்கள் உதவி செய்து பும்ராவும் 5 போட்டிகளிலும் விளையாடினால் இந்தியா சிறப்பாக செயல்படும்” என்று கூறினார்.

- Advertisement -