ஐ.பி.எல் வரலாற்றின் பெஸ்ட் லெவன் சி.எஸ்.கே அணி இதோ. இதைவிட பெஸ்ட் இருக்க முடியாது – லிஸ்ட் இதோ

csk

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றிகரமான அணியாக இருக்கிறது. இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இதற்கெல்லாம் காரணம் அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். அவர் ஒவ்வொரு முறையும் சரியான அணியை கட்டமைப்பதில் தான் அந்த அணியின் வெற்றி அடங்கியிருக்கிறது. தற்போது இத்தனை வருட வரலாற்றில் மிகச்சிறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

இந்த அணியில் துவக்க வீரராக முரளி விஜய் இருப்பார். 2008ஆம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மொத்தம் 2,582 ரன் குவித்துள்ளார். மற்றொரு துவக்க வீரராக 59 போட்டிகளில் ஆடி 2,000 ரன்கள் குவித்த மைக் ஹசி இடம் பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த வீரர் சுரேஷ் ரெய்னா இடம் பிடித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு தொடரிலும் குறைந்தது 400 ரன்கள் அடித்து விடுவார் என்ற பெருமை இவருக்கு இருக்கிறது.

நான்காவது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டூப்லஸ்ஸிஸ் வருகிறார். 5 ஆவது இடத்தில் அந்த அணியில் நிரந்தர கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இடம்பிடிக்கிறார். இவரை பற்றி பெரிதாக சொல்ல தேவையில்லை .இவர்தான் கேப்டனாகவும், விக்கெட்டு கீப்பராகவும் இருப்பார்
ஆறாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து வருடம் விளையாடிய ஆல்பி மார்கல் இடம் பிடிப்பார். இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டர் ஆவார்.

ஏழாவது இடத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ இடம் பிடிப்பார் . எட்டாவது இடத்தில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் மிகச் சிறந்த பீல்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பிடிக்கிறார். ஒன்பதாவது இடத்தில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பத்தாவது இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாகர் இடம்பிடித்துள்ளார்.

- Advertisement -

vijay

11வது இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் மோஹித் சர்மா ஆகியோர் இடம் பிடிக்கிறார்கள். ஐ.பி.எல் தொடரின் சிறந்த பெஸ்ட் லெவன் சி.எஸ்.கே அணி இதோ : முரளிவிஜய், மைக் ஹஸி, சுரேஷ் ரெய்னா, டுப்லஸ்ஸிஸ், மகேந்திர சிங் தோனி, ஆல்பி மார்கல், ரவீந்திர ஜடேஜா, பிராவோ, ரவிச்சந்திரன் அஸ்வின், தீபக் சாகர், மோகித் சர்மா.