தற்போதைய கிரிக்கெட்டில் அசத்தும் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

Left-Handed
- Advertisement -

ஒரு இடது கையை வீரர் அணியில் இருப்பது எப்போதுமே அணிக்கு ஒரு சாதகம் தான். வலது – இடது என பேட்டிங் மாற்று இறக்கி விட்டால் கூட பந்துவீச்சாளர்களுக்கு சிரமமாகிவிடும். அப்படிப்பட்ட சமகாலத்தில் உள்ள மிகச் சிறந்த ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றி பார்ப்போம்

Warner

- Advertisement -

டேவிட் வார்னர் :

தற்போது உள்ள மிகச்சிறந்த அதிரடியான இடதுகை பேட்ஸ்மேன். இவர் மூன்று விதமான போட்டிகளிலும் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். 33 வயதான இவர் ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் போட்டிகளில் 7244 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 5567 ரன்களும் டி20 போட்டிகளில் 2207 ரன்கள் குவித்துள்ளார். மொத்தம் 43 சதங்களும் 68 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

dhawan 2

ஷிகர் தவான் :

- Advertisement -

இவர் துவக்கம் முதலே அதிரடியாக ஆடுவதில் வல்லவர். மூன்று விதமான போட்டிகளிலும் ஒரே மாதிரியாக அதிரடியாக ஆடுவார். தற்போது 34 வயதான இவர் டெஸ்ட் போட்டிகளில் 2315 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 5678 ரன்களும் டி20 போட்டிகளில் 1588 ரன்கள் குவித்துள்ளார். மொத்தம் 24 சதங்களும் 43 அரை சதங்களையும் விளாசியுள்ளார்.

குவின்டன் டி காக் :

- Advertisement -

தென்னாப்பிரிக்காவின் கேப்டன் இவர் இளம் வயதிலேயே அந்த அணிக்கு அறிமுகம் ஆகி விட்டார். அடுத்த 10 வருடத்தில் இவர் பேட்டிங் ஜாம்பவானாக இருப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தற்போது 27 வயதான இவர் டெஸ்ட் போட்டிகளில் 2954 ரன்களும் ஒருநாள் போட்டியில் 5235 ரன்களும் குவித்துள்ளார். இதில் மொத்தம் 20 சதங்களும் 48 அரை சதங்களும் அடங்கும்.

morgan

இயான் மார்கன் :

- Advertisement -

அயர்லாந்தை சேர்ந்த இவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவருக்கு 33 வயதாகிறது. பார்க்க சாதுவாக இருப்பார். ஆனால் அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்கும் கடந்த உலக கோப்பை தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 17 சிக்சர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இடது கையில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்.

Miller

டேவிட் மில்லர் :

இவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். 36 வயதாகிறது. திடீரென இறங்கி களத்தை கபளீகறமாக்குவதில் வல்லவர் 10 பந்துகளுக்கு 35 ரன்கள் வேண்டுமென்றால் இவரை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கலாம். அடித்து வெற்றி பெற்று கொடுத்துவிடுவார். அந்த அளவிற்கு இடதுகை ஆட்டக்காரர்.

Advertisement