தேர்தலில் ஜெயித்து மினிஸ்டர் ஆன பிறகும் ரஞ்சி கோப்பையில் விளையாடி சதம் அடித்த – இந்திய வீரர்

Manoj Tiwary
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் மாநில அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு மாநிலங்களும் தற்போது காலிறுதி சுற்றில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் பெங்கால் அணியும் ஜார்கண்ட் அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் தற்போது விளையாடி வருகிறது.

Manoj Tiwary 2

- Advertisement -

இந்த போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் மிகவும் பேசப்படும் சுவாரசியமான விடயமாக மாறி உள்ளது. அதற்கு காரணம் யாதெனில் பெங்கால் அணி சார்பாக விளையாடிய விளையாட்டு துறை அமைச்சரான மனோஜ் திவாரி ஜார்கண்ட் அணிக்கெதிராக சதமடித்து அசத்தியுள்ளார்.

ஆம் 36 வயதான இந்திய வீரரான மனோஜ் திவாரி கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் மூன்று போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதை தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 98 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Manoj Tiwary 1

இந்நிலையில் அண்மையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்று பிஜேபி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். மேலும் மம்தா பானர்ஜி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அவர் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

இப்படி தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரரான பின்பும் கிரிக்கெட்டின் மீது உள்ள பிரியம் காரணமாக பெங்கால் அணிக்காக விளையாடி வரும் அவர் ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 73 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 136 ரன்களையும் அடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட் மட்டுமல்ல. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இவர் சாதிப்பார் – இளம் பவுலரை புகழ்ந்த கம்பீர்

இந்த சதத்தின் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 28-ஆவது சதத்தை பதிவு செய்துள்ள இவர் அமைச்சரான பின்னர் அடித்த முதல் சதம் என்பதனால் மைதானத்திலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதோடு அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் அவரது இந்த சதத்தை பெரிதளவில் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement