பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் ரிச்சா கோஷுக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான பரிசுத்தொகை – கங்குலி வாழ்த்து

Richa Ghosh
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கையில் 2025-ஆம் ஆண்டிற்கான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. இந்த தொடரில் பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடியிருந்த வேளையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த வகையில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த மாபெரும் இறுதிப்போட்டியானது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது.

ரிச்சா கோஷுக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் அளித்த பரிசுத்தொகை :

அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதலில் விளையாடி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே அடித்ததால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இதன் முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பை தொடரையும் இந்திய அணி கைப்பற்றி வரலாறு நிகழ்த்தியிருந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி அடைந்த வெற்றிக்கு பிறகு பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்ட வேளையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் அவர்களது மாநில அரசுகள் பரிசு தொகையையும், பதவிகளையும், விருதுகளையும் வழங்கி வருகின்றன.

அதோடு பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பிடித்திருந்த ரிச்சா கோஷ் அந்த தொடர் முழுவதுமே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திருந்தார். அதோடு முக்கியமான இறுதிப்போட்டியில் 34 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு கை கொடுத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவருக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் அவர் இறுதிப்போட்டியில் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு லட்சம் வீதம் என்கிற அடிப்படையில் 34 லட்ச ரூபாய் அவருக்கு பரிசுத்தொகையாக வழங்கப்பட்டதோடு சேர்த்து முன்னாள் இந்திய ஆடவர் அணி கேப்டனான சவுரவ் கங்குலி மற்றும் இந்திய மகளிர் அணி கேப்டனான ஜுலேன் கோஸ்வாமி ஆகியோர் கையெழுத்திட்ட தங்கமூலம் பூசப்பட்ட ஒரு சிறப்பு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – ஒளிபரப்பு விவரம் இதோ

பின்னர் ரிச்சா கோஷின் செயல்பாடு குறித்து வாழ்த்தி பேசியிருந்த சவுரவ் கங்குலி கூறுகையில் : உலகக் கோப்பையை வெல்வது என்பது மிகவும் சிறப்பான உணர்வு. அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பது ரிச்சாவால் மட்டும் தான் சொல்ல முடியும். டாப் ஆர்டர் வீரர்களை காட்டிலும் கீழ் வரிசையில் 130-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளையாடிய ஆட்டம் இந்திய அணிக்கு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த ஆட்டம் டாப் ஆர்டரில் விளையாடும் வீரர்களின் பங்களிப்பிற்கு சமமான ஒன்று. எதிர்காலத்தில் நிச்சயம் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக அவர் முன்னேறி நிற்பார் என்று தனது வாழ்த்தினை சவுரவ் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement