இனிவரும் போட்டிகளிலும் இவரது அசுரவேகம் மிரட்டும். ஆஸ்திரேலிய அணி திக்குமுக்காடும். கொஞ்சம் பத்திரமா இருங்க – ஸ்டோக்ஸ் மிரட்டல்

Stokes
- Advertisement -

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் அறிமுகம் ஆனார். களமிறங்கிய முதல் போட்டி என்றாலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆர்ச்சர் அதுமட்டுமின்றி சுமார் 150 கிலோ மீட்டர் அசுர வேக பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

Marnus 1

- Advertisement -

இவரது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். அதிலும் குறிப்பாக நான்காவது நாளில் ஸ்மித் கழுத்துப் பகுதியில் பவுன்சர் வீசி அவரை நிலைகுலைய வைத்து அவரை வெளியேற்றினார். அதனால் ஸ்மித் இரண்டாவது இன்னிங்சில் விளையாடமுடியாமல் வெளியேறினார்.

மேலும் அவருக்கு பதிலாக வந்த மாற்று வீரர் மார்னஸை இரண்டாவது பந்திலேயே அதிரடியாக தாக்கினார் ஆர்ச்சர். இந்நிலையில் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டோக்ஸ் ஆர்ச்சரின் பந்துவீச்சு இந்த தொடரில் எப்படி இருக்கும் என்பது குறித்து பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :

Archer

ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் இனி வரும் போட்டிகளில் சிரமப்படுவார்கள். ஆக்ரோஷமான பவுன்சர்களை ஆஸ்திரேலிய அணிக்கு வீசுவதில் இருந்து ஆர்ச்சர் விலகமாட்டார். ஏனெனில் அவரது பந்துவீச்சு ஸ்டைலே அதுதான் மேலும் இனிவரும் ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டு ஆகவேண்டும். அவரின் அசுர வேகமும் அவரது அசாத்திய திறமையும் வரும் போட்டிகளில் வெளி காட்டுவார் என்று பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலிய அணியை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement