உயிரே போனாலும் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார் போல – ராஜஸ்தான் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் பேச்சு

rr

ஐபிஎல் தொடர் இந்த மார்ச் 29 ஆம் தேதி முதல் நடைபெற நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஐபிஎல் நிர்வாகம் படுஜோராக செய்திருந்தது. குறிப்பாக கங்குலி தலைமை ஏற்ற முதல் ஐபிஎல் தொடராக இது இருந்தது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

Ipl cup

மேலும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் நடைபெறுன்மா என்பதும் கேள்விக்குறி தான். இந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. பல்வேறு நாட்டு அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆட விருந்தினர். ஆஸ்திரேலியாவிலிருந்து 17 பேரும் இங்கிலாந்தில் இருந்து 13 பேரும் என வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக பங்கேற்பதாக இருந்தது.

இந்நிலையில் இந்த தொடர் தற்போது இந்தியாவில் உள்ள சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது நிச்சயம் நடைபெறாது என்றே தோன்றுகிறது. மேலும் இந்த சூழல் எப்போது சாதாரண நிலைக்கு திரும்பும் என்றும் மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் பலநாட்டு அரசாங்கமும் கொரோனாவிற்காக பல்வேறு விளையாட்டு போட்டிகளை தள்ளி வைத்துள்ளது.

Stokes

இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடர் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் :அடுத்ததாக நான் ஒரு தொடரில் விளையாடினால் அது ஐபிஎல் தொடராகத்தான் இருக்கும். ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புகள் குறைவுதான். இருந்தாலும் ஏப்ரல் 20ம் தேதி தொடங்கலாம் என்று நினைக்கிறேன். அப்போது தொடங்கிவிட்டாலும் கண்டிப்பாக ஆடுவேன்.

- Advertisement -

மேலும், தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகி வருகிறேன். ஐபிஎல் போட்டியில் விளையாட மூன்று வாரங்களுக்கு காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். ஆனால் தற்போது இந்தியா இருக்கும் சூழலை பார்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவே இன்னும் 2 மாதத்திற்கும் மேலாகும் என்றே தோன்றுகிறது.

stokes

இதனால் இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் நிச்சயம் நடைபெறாது என்பதை இப்போது உறுதியாக கூறலாம். ஏனெனில் கங்குலியும் பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் இந்தியாவில் நிலைமை மாறவில்லை. அப்படியே இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -