இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 180 ரன்களை முன்னிலையாகப் பெற்று அசத்தியது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர்.
அம்பயர் இந்தியாவுக்கு சப்போர்ட்:
இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 28 (22) ரன்கள் எடுத்து சவாலை கொடுக்கத் துவங்கினார். அப்போது ஜோஸ் டாங் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தை அடிக்கத் தவறிய அவர் காலில் வாங்கியதால் இங்கிலாந்து அணியினர் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட் கேட்டனர்.
அதற்கு களத்தில் இருந்த வங்கதேசத்தை சேர்ந்த நடுவர் சர்ஃபுடௌலா அவுட் வழங்கினார். அதனால் ஏமாற்றமடைந்த ஜெய்ஸ்வால் ரிவியூ எடுப்பதற்காக தம்முடைய பார்ட்னர் கேஎல் ராகுலுடன் விவாதித்தார். ஆனால் அவர் பேசி முடிவதற்குள் நிர்ணயிக்கப்பட்ட 15 நொடிகள் முடிந்து போனது. இறுதியாக ராகுல் ஆலோசனையை ஏற்ற ஜெய்ஸ்வால் ரிவ்யூ எடுப்பதற்கு சைகை காட்டினார்.
சண்டையிட்ட பென் ஸ்டோக்ஸ்:
அதை களத்தில் இருந்த நடுவரும் ஏற்றுக்கொண்டு 3வது நடுவரை ரிவியூ எடுக்குமாறு அழைத்தார். அதைப் பார்த்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜெய்ஸ்வால் ரிவ்யூ எடுப்பதற்கு முன்பாகவே 15 நொடிகள் டைமர் முடிந்து விட்டதாக களத்திலிருந்த நடுவரிடம் கோபமாக சொன்னார். எனவே நீங்கள் இந்த ரிவ்யூவை ஏற்கக்கூடாது என்று சொன்ன பென் ஸ்டோக்ஸ் “இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ண பாக்குறீங்களா?” என்ற வகையில் நடுவருடன் சண்டையிட்டார்.
இதையும் படிங்க: 184 ரன்ஸ்.. இந்தியாவை அட்டாக் செய்து கலங்கடித்த ஜேமி ஸ்மித்.. 28 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை
இருப்பினும் களத்தில் இருந்த நடுவர் 15 நொடிகள் முடிந்ததை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. அதனால் பென் ஸ்டோக்ஸை அமைதிப்படுத்திய அவர் தொடர்ந்து ரிவியூவை எடுக்க விட்டார். அதற்கு மைதானத்தில் இருந்த இங்கிலாந்து கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கடைசியில் ரிவியூவிலும் ஜெய்ஸ்வால் எல்பிடபுள்யூ ஆனது தெளிவாக தெரிய வந்ததால் 3வது நடுவரும் அவுட் வழங்கினார். அதனால் பெரிய சர்ச்சை தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.