உலகக்கோப்பை சூப்பர் ஓவருக்கு முன்னர் சிகரெட் பிடித்து டென்ஷனை குறைத்த இங்கி வீரர் – வெளியான சுவாரசிய தகவல்

Eng-1
- Advertisement -

நேற்று இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஏனெனில் கடந்த ஆண்டு இதே நாளில்தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி முதன் முறையாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு வகையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி சூப்பர் ஓவரில் வரை சென்று சூப்பர் ஓவரிலும் போட்டி சமன் ஆகி பின்னர் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றி பெற்றது என்ற விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

England

- Advertisement -

அந்த விதியை சர்ச்சையை ஏற்படுத்தினாலும் உலக கோப்பையை இங்கிலாந்து அணி தான் கைப்பற்றியது என்று உறுதியாகிவிட்டது. மேலும் இந்த உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணம் யார் என்று கேட்டால் கிரிக்கெட் தெரிந்தவர்கள் அனைவரும் கூறும் பெயர் பென் ஸ்டோக்ஸ். அந்த அணியின் முன்னணி வீரரான இவர் கிட்டத்தட்ட தோற்றுவிடும் என்று முடிவான இந்தப்போட்டியில் கடைசி கட்டத்தில் தனி ஒரு ஆளாக நின்று 98 பந்துகளை சந்தித்து 84 ரன்கள் குவித்தார்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து போட்டியை சமன் செய்த அவரின் இந்த பேட்டிங்கை பார்த்து அனைவரும் வாயடைத்துப் போயினர். மேலும் போட்டி ஆனதால் சூப்பர் ஓவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இங்கிலாந்து அணிக்கு சப்போர்ட் அதிகமாக இருந்தது.

Stokes

அனைவரும் பென் ஸ்டோக்ஸ் பெயரை உரக்க கூறி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அந்த சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அடி பேட்டிங் செய்ய முன்னதாக 5 நிமிடம் இடைவேளை வழங்கப்பட்டது. அந்த சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் தயாராக அவர்களது அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

- Advertisement -

இந்நிலையில் அந்த இடைவெளி நேரத்தில் உடைமாற்றும் அறையில் ஸ்டோர்ஸ் என்ன செய்தார் என்பது குறித்து புத்தகம் ஒன்றில் வெளியான தகவலின் படி சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அந்த இடைவெளி நேரத்தில் ஸ்டோக்ஸ் உடை மாற்றும் அறைக்கு சென்று அவர்கள் தலையை ஷவரில் நின்று தனது தலையை நனைத்து டென்ஷனை குறைத்துள்ளார். மேலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் களத்தில் நின்றதால் மன அழுத்தத்தில் இருந்தார்.

stokes

அதனால் தண்ணீரில் நனைந்த பிறகு அங்கிருந்த தனி அறைக்கு சென்று சிகரெட் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர் மோர்கனிடம் வந்து பேசிய அவர் பேட்டிங் செய்ய களம் இறங்கியுள்ளார். சூப்பர் ஓவர்களில் 3 பந்துகளை சந்தித்து 8 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் சூப்பரிலும் போட்டி சமன் அடைய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement