- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி இல்லாமல் நடைபெறும் இந்த தொடரில் நிச்சயம் நாங்கள் அதனை மிஸ் பண்ணுவோம் – பென் ஸ்டோக்ஸ் பேட்டி

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை மறுநாள் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

விராட் கோலி இல்லாதது ஏமாற்றம் தான் : பென் ஸ்டோக்ஸ்

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறித்தும், விராட் கோலி இல்லாதது குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது :

- Advertisement -

இம்முறை இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது நிச்சயம் ஏமாற்றம் தான். ஏனெனில் அவர் இந்திய அணியில் இருக்கும் போது இந்திய அணியின் போராட்டமான ஆட்டமும், அவருடைய ஆக்ரோஷத்தையும் அதிகம் ரசித்திருக்கிறேன். எனவே அவரைப்போன்ற ஒரு போர் குணம் கொண்ட வீரரை இந்த தொடரில் தவறவிடுவோம் என்று நினைக்கிறேன்.

வெற்றிக்காக நெருப்பு போல் விளையாடும் விராட் கோலி போன்ற ஒரு வீரர் இல்லாமல் இந்த தொடரை எதிர்கொள்ள உள்ளது புதிதாக இருக்கிறது. இந்திய அணியில் விராட் கோலி இருக்கும்போது எப்போதுமே வெற்றியை நோக்கி அனைவரையுமே பயணிக்க வைப்பார். விராட் கோலி இருக்கும் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஒரு யுத்தம் போன்று இருக்கும். அந்த யுத்தத்தை நிச்சயம் இந்த தொடரில் தவறவிடுவோம் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

36 வயதான விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்தது ரசிகர்களின் மத்தியிலும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் இதுவரை இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30 சதம் மற்றும் 31 அரைசதம் என 46 ரன்கள் சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட உடற்தகுதி இருந்தும் அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மாவின் மகத்தான சாதனையை முறியடிக்க பும்ராவுக்கு வாய்ப்பு – விவரம் இதோ

அதோடு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கிட்டத்தட்ட 70 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெற்றிகரமான இந்திய கேப்டனாகவும் பெயர் பெற்றவர். அதோடு வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியை ஆக்ரோஷமான அணியாக மாற்றியதாக இருக்கட்டும், வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியதாக இருக்கட்டும் சிறந்த கேப்டனாக விராட் கோலி திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -