விரல் முறிந்து தொடரில் இருந்து வெளியேறினாலும் ராஜஸ்தான் அணியுடன் இருக்கும் ஸ்டோக்ஸ் – காரணம் இதுதான்

Stokes

2021-ம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது 6 மைதானங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முக்கியமான முதற்கட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி இருந்த பென் ஸ்டோக்ஸ் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போது கிரிஸ் கெயில் கேட்சை பிடித்து காயமடைந்தார்.

stokes

பந்தை கேட்ச் பிடிக்க அவர் அடித்த டைவில் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போட்டிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போட்டியில் விரலில் வலி இருந்தாலும் பெரிய இலக்கினை விரட்டுவதற்காக பேட்டிங் செய்ய வந்த ஸ்டோக்ஸ் வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் போர் முடிந்து விரலில் ஏற்பட்டுள்ள அந்த எலும்பு முறிவுக்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என்றும் அதனால் அவருக்கு நீண்ட ஓய்வு வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அதனால் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்றும் ராஜஸ்தான் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படி இந்த தொடரில் இருந்து ஸ்டோக்ஸ் வெளியேறினாலும் ராஜஸ்தான் அணியை விட்டு இன்னும் விலகாமல் அணியுடனே இருக்கிறார். மேலும் தான் காயமடைந்து இருந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனே இருக்க விரும்புகிறேன். இந்த தொடரில் இருந்து நான் செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Stokes 1

மேலும் என்னால் இந்த தொடரில் ஆட முடியாது என்பது எனக்கு தெரியும் ஆனால் இங்கிலாந்து போய் நான் வெட்டியாக இருப்பதற்கு பதிலாக இங்கிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விளையாடும் போது நான் ஊக்கம் கொடுப்பேன் என்று கூறி தனது வேண்டுகோளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் வைத்திருந்தார். அதற்கு அனுமதி அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐபிஎல் பயோ பபுளை விட்டு வெளியேறாமல் ராஜஸ்தான் அணி உடனே ஸ்டோக்ஸ்ஸை தங்க வைத்துள்ளது.

- Advertisement -

stokes 1

நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் மைதானத்தில் வெளியே அமர்ந்து கொண்டு வீரர்களை உற்சாகப் படுத்தியது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தும் சொந்த நாட்டிற்கு திரும்பாமல் அணி வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அணியை உற்சாகப்படுத்தி வரும் பென் ஸ்டோக்ஸ் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.