இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. முன்னதாக 3வது போட்டியில் இந்தியாவை போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது.
அதனால் 12 புள்ளிகளைப் பெற்ற இங்கிலாந்து 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. ஆனால் அந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இங்கிலாந்து பந்து வீசி முடிக்கவில்லை. அதனால் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளை கழித்த ஐசிசி இங்கிலாந்து அணிக்கு 10% போட்டி சம்பளத்தையும் அபராதமாக விதித்தது.
இந்தியாவுக்கு வேற நியாயமா:
அதன் காரணமாக மீண்டும் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து 3வது இடத்திற்கு சரிந்தது. இந்நிலையில் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசுவதால் தாமதமாகிறதே தவிர தாம் வேண்டுமென்றே தாமதிக்கவில்லை என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். அந்த பொதுறிவு இல்லாமல் ஐசிசி தங்கள் மீது அபராதம் விதிக்கலாமா? என்று அவர் விமர்சித்துள்ளார்.
இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் ஸ்பின்னர்கள் அதிகம் பவுலிங் செய்வதால் நேரத்திற்குள் ஓவர்கள் வீசி முடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே கண்டங்களுக்கு தகுந்தார் போல் விதிமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஓவர் ரேட் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால் நான் வேண்டுமென்றே விஷயங்களை மெதுவாக்குகிறேன் என்று சொல்வது அர்த்தமல்ல”
பொதறிவு இல்லையா:
“அதைச் சுற்றியுள்ள விரக்தியை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனமாகப் பார்ப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன். 70% ஓவர்களை ஸ்பின்னர்கள் வீசும் ஆசியாவில் அதே விதிகள் இருக்க முடியாது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதே விதிமுறைகள் இருக்க வேண்டுமா? அங்கு 70 – 80% வேகப்பந்து வீச்சு இருக்கும்”
இதையும் படிங்க: 13 ஆவரேஜ் தான்.. சிஎஸ்கே’ல பாத்துருக்கேன்.. ஜஹீர் கான் மாதிரி திறமையான அவரை விளையாட வைங்க.. அஸ்வின்
“வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின்னர்கள் குறைந்த நேரத்தில் வீசுவார்கள். எனவே பொதுஅறிவை வைத்து நீங்கள் ஓவர்ரேட் விதிமுறைகளை பல்வேறு கண்டங்களில் மாற்ற வேண்டும். சமீப வருடங்களாகவே அது பிரச்சனையாக இருந்து வருகிறது. ஓவர்களை முடிப்பதற்காக நீங்கள் ஸ்பின்னர்களிடம் பந்தைக் கொடுக்க முடியாது. ஓவர்ரேட் விதிமுறையை சமாளிப்பதற்காக நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ரசிகர்களும் அதைப் பார்க்க விரும்ப மாட்டார்கள்” என்று கூறினார்.



