கேப்டனான மகிழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ் செய்த முரட்டு சம்பவம் ! எதிரணிக்கு விடுத்த எச்சரிக்கை

Stokes
- Advertisement -

இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாக இருந்த ஜோ ரூட் தொடர் தோல்விகள் காரணமாக கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் கடந்த மாதம் கௌரவத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் அதிக போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்திய வீரர், அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து கேப்டன், அதிக தோல்விகளை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் என டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனுக்கு உண்டான அத்தனை சிறப்பான மோசமான சாதனைகளையும் படைத்து விடை பெற்றுள்ளார். அதேபோல் கேப்டனாக பேட்டிங்கில் ரன் மழை பொழிந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து கேப்டன் என்ற மகத்தான சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -

அதன் காரணமாக தொடர்ந்து ஒரு சாதாரண பேட்ஸ்மேனாக இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு பாடுபட உள்ளதாக அறிவித்துள்ள அவர் அடுத்த கேப்டனாக யார் பொறுப்பேற்றாலும் அவருக்கு உதவி செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த நிலைமையில் இங்கிலாந்தின் புதிய கேப்டனாக அதன் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த வாரம் அறிவிக்கப் பட்டார்.

கேப்டன் ஸ்டோக்ஸ்:
நியூசிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய அவர் கடந்த 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்து 2013 முதல் டெஸ்ட் உட்பட 3 வகையான கிரிக்கெட்டிலும் முன்னணி வீரராக உருவெடுத்தார். அந்த நிலையில் 2016இல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் கடைசி ஓவரை வீசிய அவர் 4 சிக்சர்களை கொடுத்து உலக கோப்பையையும் எதிரணிக்கு பரிசளித்து மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானார்.

Stokes-1

ஆனால் அதன்பின் 2019இல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்று இங்கிலாந்து முதல் முறையாக உலககோப்பையை வெல்ல துருப்பு சீட்டாக இருந்தார். அதே வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் போட்டியில் ஹெண்டிங்க்லே நகரில் வரலாற்றின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்சை விளையாடி தன்னை உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் என பிரகடனப்படுத்தி எழுச்சி கண்டார். அப்படி இங்கிலாந்து நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரராக உருவெடுத்த அவர் 2017 முதல் ஜோ ரூட் தலைமையிலான டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வந்த நிலையில் தற்போது புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

கவுண்டியில் சம்பவம்:
இந்நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் வோர்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் தனது சொந்த அணியான டுர்ஹாம் அணிக்கு அவர் களமிறங்கினார். மே 5-ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டுர்ஹாம் 580/6 ரன்கள் விளாசி தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு சீன் டிக்சன் 104, கீகன் பீட்டர்சன் 50, போத்விக் 89, பேடிங்கம் 135 போன்ற வீரர்கள் அடுத்தடுத்து நல்ல பேட்டிங் செய்து பெரிய ரன்கள் எடுத்ததால் ஆரம்பத்திலேயே அந்த அணி வலுப்பெற்றது.

அப்போது வழக்கம்போல மிடில் ஆர்டரில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் வழக்கத்திற்கு மாறாக அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக 47 பந்துகளில் அரை சதம் கடந்து அவர் அடுத்த 50 ரன்களை வெறும் 17 ரன்களில் கடந்து 64 பந்துகளில் மிரட்டலான சதமடித்தார். அதிலும் 70 ரன்கள் எடுத்திருந்த போது ஜோஷ் பேக்கர் எனும் சுழல் பந்து வீச்சாளரை வசமாக வைத்து செய்யும் வகையில் அவர் வீசிய முதல் 5 பந்துகளில் அடுத்தடுத்த 5 மெகா சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசி மிரட்டலாக சதமடித்தார்.

- Advertisement -

சாதனையும் எச்சரிக்கையும்:
மொத்தமாக வெறும் 8 பவுண்டரி 17 சிக்சர் உட்பட 88 பந்துகளில் 161 ரன்களை விளாசிய பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் கேப்டனாக இப்படி தான் விளையாட போகிறேன் என இந்தியா உட்பட பல எதிரணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் 17 சிக்சர்களை பறக்க விட்ட அவர் கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:

இதையும் படிங்க : மச்சம் இருக்கு! தோனியின் ஆல் டைம் அதிர்ஷ்ட சாதனையை சமன் செய்த வில்லியம்சன் – முழு அலசல்

1. பென் ஸ்டோக்ஸ் : 17, 2022*
2. கிரகாம் நேப்பியர் : 16, 1995
3. ஆண்ட்ரு சைமன்ஸ் : 16, 2011

Advertisement