ஆஸியை பதம் பாத்தாச்சு, அடுத்த டார்கெட் இந்தியா தான் – 2024 தொடர் பற்றி பென் ஸ்டோக்ஸ் மறைமுகமான எச்சரிக்கை பேட்டி

Ben Stokes 6
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தாலும் 3வது போட்டியில் வென்ற இங்கிலாந்து தக்க பதிலடி கொடுத்தது. அதே போல 3வது போட்டியில் போராடிக் கொண்டு வந்த வெற்றியை மழை தடுத்தாலும் 5வது போட்டியில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு போராடி வென்ற அந்த அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தாலும் 2001க்குப்பின் 21 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றியது.

முன்னதாக 2019 முதல் 2021 வரை கேப்டனாக இருந்த ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து சொந்த மண்ணிலேயே வெற்றிகளை பெறுவதற்கு திண்டாடியதால் 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெரும் வாய்ப்பையும் இழந்தது. அப்போது அதிரடியாக விளையாடக்கூடிய பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவருக்கு உறுதுணையாக அதிரடியை மட்டுமே விரும்பக்கூடிய ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை:
அவர்களது தலைமையில் நியூசிலாந்தை 2 – 0 (2) என்ற கணக்கில் அடித்து நொறுக்கியதை போலவே ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் இந்தியாவை துவம்சம் செய்த இங்கிலாந்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தென்னாப்பிரிக்காவையும் 2 – 1 (3) என்ற கணக்கில் வீழ்த்தியது. அப்போது வெளிநாட்டு மண்ணில் சாதிக்க முடியுமா என்று வந்த விமர்சனங்களை பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் சரமாரியாக அடித்து நொறுக்கி 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இங்கிலாந்து கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்து மண்ணில் 1 – 1 (2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

அத்துடன் அதிரடியான அணுகு முறையில் விளையாடி இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோற்றாதல் விமர்சனங்களை சந்தித்தாலும் அதே போலவே விளையாடுவோம் என்று அடம் பிடித்த ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் கடைசி 3 போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்தனர். அதனால் “பஸ்பால்” என அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடும் அதிரடியான அணுகு முறையை இங்கிலாந்து தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக தங்களுடைய முதல் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிறைவு செய்துள்ள இங்கிலாந்து அடுத்ததாக வரும் 2024 பிப்ரவரியில் வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. ஆனால் அந்த தொடரில் தான் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலும் உண்மையான சோதனையும் காத்திருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் இதுவரை பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமான வேகப்பந்து வீச்சுக்கு கை கொடுக்கக் கூடிய மைதானங்களில் வெற்றிகரமாக செயல்பட்ட இங்கிலாந்து சுழலுக்கு சாதகமான இந்திய மண்ணில் அதே அதிரடியான அணுகு முறையில் வெற்றி காண்பது மிகவும் கடினமாகும்.

மேலும் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் மிரட்டி வரும் இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த காலங்களில் நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளை அடித்து நொறுக்கிய தங்களால் இந்திய மண்ணிலும் அதே போல செயல்பட்டு சாதிக்க முடியும் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஆஷஸ் தொடரின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நியூசிலாந்தை 3 – 0 என்ற கணக்கில் நாங்கள் தோற்கடித்த போது அதை தென்னாபிரிக்காவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் எங்களால் செய்ய முடியாது என்ற பேச்சுக்கள் இருந்தன. எனவே இந்தியாவுக்கு எதிராகவும் நாங்கள் அதை செய்வோம் என்பதை யார் அறிவார்கள். அதற்கான பதிலை காலமே தெரிவிக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs WI : பாக் வீரர் இமாம் உலக சாதனையை உடைத்த சுப்மன் கில், இஷானுடன் சேர்ந்து தவான் – ரகானே சாதனையும் உடைத்து அபாரம்

முன்னதாக கடைசியாக 2012இல் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்கடித்த அணி என்ற பெருமையை கொண்டுள்ள இங்கிலாந்து அதே மேஜிக்கை தற்போது மிரட்டலாக செயல்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement