காயம் காரணமாக இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் – சிக்கலில் டீம் மேனேஜ்மென்ட்

- Advertisement -

கடந்த திங்கட்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடியது. அந்தப் போட்டியின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 222 இலக்கை அடைய முடியாமல் 217 ரன்கள் மட்டும் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் தோல்வி அடைந்ததை விட இந்த போட்டியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸின் இடது கை விரல் உடைந்த செய்தி ராஜஸ்தான் அணி ரசிகர்களை பெரிய அளவில் துயரப்பட வைத்துள்ளது.

richardson

- Advertisement -

முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ஒரு கட்டத்தில் மிக அபாரமாக விளையாடி கொண்டிருந்தார். 27 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணியை மிகப்பெரிய அளவில் கிறிஸ் கெயில் அச்சுறுத்தி வந்தார். பின்னர் ரியான் பராக் வீசிய பந்தில் கிறிஸ் கெயில் ஆட்டமிழந்தார். கிறிஸ் கெயில் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது பென் ஸ்டோக்ஸ் மிகவும் சிரமப்பட்டு அந்த கேட்ச் பிடித்தார்.

அதன் விளைவாக பென் ஸ்டோக்ஸ் இன் இடது கை விரல் உடைந்துள்ளது. மருத்துவர் குழு ஆலோசனைப்படி அவருக்கு நாளை எக்ஸ்ரே எடுக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி இன்னும் ஒரு வாரம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குப் புறப்படக் இருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் இன் இந்த காயம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை மிகப்பெரிய அளவில் அச்சப்படுத்தியுள்ளது.

stokes

இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து நிறைய கிரிக்கெட் தொடர் இருக்கும் நிலையில் பென் ஸ்டோக்ஸ் இப்படி காயமடைந்த செய்தி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எனவே பென் ஸ்டோக்ஸுக்கு உரிய சிகிச்சை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செய்ய தயாராக உள்ளது. இதன் காரணமாக அவர் இந்த வருட ஐ.பி.எல் இருந்து வெளியேறவுள்ளார். உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் இப்படி ஒரே ஒரு போட்டியில் விளையாடி வெளியேறுவது ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.

Stokes 1

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை போலவே ராஜஸ்தான் கிரிக்கெட் அணி வாரியமும் பென் ஸ்டோக்ஸுக்கு மாற்று வீரராக யாரை தேர்ந்தெடுப்பது என்று பல கோணங்களில் யோசித்து வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. இருந்தாலும் ஸ்டோக்ஸ்க்கு மாற்றுவீரரை தேர்வு செய்வது கடினம் என்றே தோன்றுகிறது.

Advertisement