என்னை விட வில்லியம்சன் தான் அந்த விருதுக்கு பொருத்தமானவர். என் ஓட்டு அவருக்குத்தான் – பென் ஸ்டோக்ஸ்

Stokes
- Advertisement -

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அந்த அணி உலக கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். உலக கோப்பை தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனது அணிக்கு வெற்றியை தொடர்ந்து பெற்றுத்தந்தார்.

stokes

- Advertisement -

உலக கோப்பை தொடரில் மொத்தம் 465 ரன்களுடன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் நியூசிலாந்து இங்கிலாந்தின் ஸ்டோக்சை கௌரவப்படுத்த முன்வந்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணிக்காக ஸ்டோக்ஸ் விளையாடினாலும் அவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். நியூசிலாந்தில் பிறந்த ஸ்டோக்ஸ் தனது 12ஆவது வயதில் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்று அந்த நாட்டுக்காக விளையாடினார்.

தற்போது அவர் பெற்றோர்கள் அங்கிருந்து கிளம்பி மீண்டும் கிறிஸ்ட்சர்ச்சில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக கோப்பையில் சிறப்பாக ஆடிய அவரை கௌரவிக்க நியூசிலாந்து முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த வருடத்தின் சிறந்த நியூஸிலாந்து நாட்டவர் என்ற விருதுக்கு அவரின் பெயர் பரிசு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு கேன் வில்லியம்சன் உட்பட மேலும் பலரையும் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்டோக்ஸ் இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டோக்ஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டவையாவது : நியூசிலாந்து நாட்டின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் இந்த விருதுக்கு என்னைவிட தகுதியானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

Williamson

அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர். ஏனென்றால் அவர் ஒரு ஜாம்பவான் வீரர். அவர் நியூசிலாந்து அணயை உலகக் கோப்பையில் சிறப்பாக வழிநடத்தி வந்தார். ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விருதை வில்லியம்சனுக்கு தர பரிந்துரை செய்வோம். என்னுடைய முதல் ஓட்டு வில்லியம்ஸ் எனக்குத்தான் என தெரிவித்துள்ளார்

Advertisement