இவர்கள் இருவரே தற்போதைய உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் – பென் ஸ்டோக்ஸ் கணிப்பு

Stokes
- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் வருகைக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் மவுசு வெகுவாகக் குறைந்தது. ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் ஆடப்பட்டது. அதற்கு பின்னர் 40 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் கிரிக்கெட் கொண்டுவரப்பட்டது. அப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பெரிதாக சேதம் ஏற்படவில்லை.

stokes

- Advertisement -

பின்னர் 2004 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்போதே டெஸ்ட் கிரிக்கெட் அணி தனது சரிவை சந்திக்க ஆரம்பித்தது. மக்கள் 5 நாட்கள் ஒரு இடத்தில் தங்கி இருந்து டெஸ்ட் கிரிக்கெட் பார்க்க விரும்பவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் நான்கு நாட்களாக ஐசிசி முடிவு செய்துள்ளது. இது குறித்து பல வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐசிசியின் இந்த முடிவை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்தான் எப்போதும் உயர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து கொண்டு வருவதாக பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கிறது.ஆனால் இது எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை.

Stokes

நீங்கள் பல வீரர்களை கேட்டு இருக்கலாம், ஆனால் விராட் கோலி, ஜோ ரூட் ஆகியோரிடம் கேட்டால் டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு சிறப்பானது என்று அவர்கள் கூறுவார்கள். என்னை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் எப்போதும் தூய்மையான வடிவம். தற்போது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

ஆகையால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டு வந்தால் அது ஈஸி கிரிக்கெட் என்று அழைக்கலாம் என்று கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். மேலும் தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் குறித்து பேசிய ஸ்டோக்ஸ் குறிப்பிடுகையில் : சூழ்நிலைக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொண்டு விளையாடக்கூடிய ஜாஸ் பட்லர் சிறப்பான வீரராக எனக்கு தெரிகிறார். ஏனெனில் மைதானத்தின் எந்த ஒரு பகுதியிலும் இவரால் பவுண்டரிகளை அடிக்கமுடியும்.

buttler

மேலும் இவர் மைதானத்தின் நாலாபுறமும் பந்தினை சிதறடிக்கூடிய திறமை உள்ளதவர். அதுமட்டுமின்றி உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடி அதுபோல நிதானமான ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடியும் என்று கூறினார். அடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் பேட்டிங் ஒரு தனி ரகம் என்று குறிப்பிட்டார்.

smith

மேலும் அவரது பேட்டிங்கை எதிரணி வீரராகவும், ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போது சக வீரராகவும் உணர்ந்திருக்கிறேன். அவரது பேட்டில் மிக புத்திசாலிதனமாகவும், கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும் எனவே இவர்கள் இருவரையும் நான் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று நினைக்கிறன் என்று ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement