3 ஆண்டுகளாக கோலி வைத்திருந்த பட்டத்தை காலி செய்த பென் ஸ்டோக்ஸ். மரியாதை போச்சா ? – விவரம் இதோ

Stokes
- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் கிரிக்கெட் போட்டியினை உன்னிப்பாக கவனிக்கும் விஸ்டன் நாளிதழ் அந்தாண்டு முழுவதும் தனித்தனியே வீரர்களின் செயல்பாட்டை கவனித்து வரும். அதனடிப்படையில் கிரிக்கெட் வீரர்களுக்கான பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழ் ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்து கௌரவிக்கும்.

stokes

- Advertisement -

அந்தவகையில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரராக இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை டிரா செய்வதற்கும் இங்கிலாந்து அணி 50 ஓவர் உலக கோப்பை தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதனடிப்படையில் விஸ்டன் சிறந்த வீரராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2005 ஆம் ஆன்ட்ரு பிளின்டாப் ஆண்டு இந்த விருதை பெற்று இருந்தார். அதன் பின்னர் 15 ஆண்டுகள் கழித்து இந்த விருதை பெறும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் பிளிண்டாப்க்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு சிறப்பான ஆல்ரவுண்டராக இவர் தற்போது உருவெடுத்துள்ளார்.

Stokes

ஸ்டோக்ஸ் உடைய ஆட்டம் ஆண்டுக்காண்டு முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பார்மில் உள்ளார். பேட்டிங்கில் அதிரடியாக ஆடுவது மட்டுமின்றி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்டோக்ஸ் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி எதிரணிக்கு கடும் போட்டியை தருகிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது கூட அவரது ஆட்டம் வேற லெவலில் இருந்தது. அதிலும் முக்கியமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது என்று நினைத்த இறுதி போட்டியை ஒரே ஆளாக தனியாக நின்று இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித்தந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

Stokes-1

அதன்பின்னர் உலகின் தற்போதைய சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வரும் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் இந்த வருடம் விஸ்டன் நாளிதழ் அவருக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த மூன்று வருடங்களாக இந்த விருதை பெற்றது இந்தியாவின் விராட் கோலி தான். அவரிடம் இருந்து தற்போது தட்டி பறித்துள்ளார் பென் ஸ்டாக்ஸ்.

Advertisement