சென்னை அணியை தொடர்ந்து பெரிய சிக்கலை சந்திக்க உள்ள ராஜஸ்தான் அணி – முக்கிய வீரர் பங்கேற்பதில் சந்தேகம்

Stokes

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்னும் சில தினங்களில் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் இத்தொடர் 54 நாட்கள் நடைபெறும். இத்தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்தொடருக்கான முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

Raina

இந்த தொடர் குறித்த பேச்சு ஆரம்பமானதிலிருந்தே பல்வேறு அணிகள் பெரும் சிக்கலை சந்தித்து கொண்டேதான் இருக்கிறது. அதாவது முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா தொடரில் இருந்து விலகினார். அடுத்ததாக சொந்த பிரச்சினை காரணமாக ஹர்பஜனும் விலகினார். அதேபோன்று மும்பை அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவும் இந்த தொடரில் இருந்து விலகினார். அடுத்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக தொடரின் பாதியிலேயே விலகி நியூசிலாந்து சென்றடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருடன் இருப்பதற்காக அவர் நியூசிலாந்து புறப்பட்டார். இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் கூறுகையில் :

stokes

உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை காண பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து சென்றுள்ளார். நாங்கள் அவரை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர் அவரது தந்தையுடனும், குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிட விரும்புகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவரால் தொடரின் முதல் பாதியில் பங்கேற்க இயலாது மீதமுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியாது. அவரின் விருப்பப்படி தற்போது அவர் தந்தையுடன் நேரத்தில் செலவிடட்டும். ஆனால் அவர் எப்போது துபாய் வர விரும்பினாலும் அதற்கு வேண்டுமான ஏற்பாடுகளை நாங்கள் செய்து தருவோம் என்றும் அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.

தனது தந்தை குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்டோக்ஸ் கூறுகையில் : எனது தந்தையின் உடல் நிலை மோசமாக உள்ளது. பல இரவுகளில் நான் தூங்கவில்லை என் தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது. ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதற்கு சரியான நேரம் இதுவே என்று தீர்மானித்துள்ளேன் என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.