கபில் தேவை முந்தி சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ். தரமான செய்கை தான் – என்ன சாதனைனு பாருங்க

Stokes
- Advertisement -

உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக வலம் வருபவர் பென் ஸ்டோக்ஸ். நியூசிலாந்தில் பிறந்து தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் மாறியுள்ளார். ஜோ ரூட் இல்லாத நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர்தான் தற்போது கேப்டன்ஷிப்பை கவனித்து வருகிறார். கடந்த 8 ஆம் தேதி துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வருகிறார்.
.
Stokes

ஸ்டோக்ஸ் இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளிலும், 95 ஒருநாள் போட்டிகளிலும், 26 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் தான் தனது மாயாஜால வித்தை காட்டுகிறார் இவர். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் பந்து வீச்சில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இவர் 150 டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

மேலும் டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே 4056 ரன்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் 150 விக்கெட்டுகளும் 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் ஆக மாறி உள்ளார். இந்த சாதனையை வெறும் 63 போட்டிகளில் செய்துள்ளார் அவர். இந்தியாவின் கபில்தேவ் 69 போட்டிகளில் ஆடி தான் 4000 ரன்களும் 150 விக்கெட்டுகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Stokes

இதன் மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ் இந்த பட்டியலில் கேரி சோபார்ஸ் முதலிடத்தை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்திற்கு கபில்தேவும் நான்காவது இடத்திற்கு ஜாக் காலிசும் தள்ளப்பட்டுள்ளனர்.

stokes

ஏற்கனவே இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் பென் ஸ்டோக்ஸ் இந்த கேப்டன் பொறுப்பிற்கு அவர் தகுதியான வீரர் என்றும் அவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்று பலமுறை நான் அவரது ஆட்டத்திலிருந்து தெரிந்து கொண்டதாகவும் சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement