டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருந்து ஆல்ரவுண்டர் விலகல் – சிக்கலில் அணி நிர்வாகம்

Stokes
Advertisement

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இங்கு நடத்த முடியாத சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்தது. அதன்படி நடப்பு டி20 உலககோப்பை தொடரானது அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

Cup

இந்த டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் அனைத்து அணிகளும் தங்களது முழு அணியையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து மற்ற நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் தங்களது அணிகளை வெளியிட இருக்கின்றனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

stokes

மேலும் அவரது பெயரும் இங்கிலாந்து அணியில் இடம்பெறாது என்றே தெரிகிறது. ஏனெனில் கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் சிறிது காலம் ஓய்வு தேவை என்று விலகிய நிலையில் அவரை இங்கிலாந்து நிர்வாகம் விளையாடுமாறு வற்புறுத்தாது என்றும் அவரே மீண்டும் அணிக்கு திரும்பும் வரை அவரை அழைக்கப் போவதில்லை என்றும் முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக ஸ்டோக்ஸ் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என்றே தெரிகிறது. ஏற்கனவே ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கும் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்புவார் என்று தெரிகிறது.

Advertisement