பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்துக்கு விளையாட விரும்பினார் ஆனால் – ஆரம்பக்கால பின்னணியை பகிரும் முன்னாள் வீரர்

Stokes
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அடுத்த சில வருடங்களிலேயே தனது மிகச்சிறந்த செயல்பாடுகளால் 3 வகையான அணியிலும் நிரந்தரமான இடத்தைப் பிடித்தார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அவர் முதன்மை பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பந்து வீச்சிலும் பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். இருப்பினும் 2016இல் இந்திய மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் கடைசி ஓவரில் அடுத்தடுத்த 4 சிக்சர்களை கொடுக்கும் அளவுக்கு மோசமாக பந்துவீசிய அவர் கோப்பையையும் வெஸ்ட் இண்டீசுக்கு தாரை வார்த்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.

Ben Stokes

- Advertisement -

ஆனால் தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்ற வகையில் மனம் தளராமல் உழைத்த அவர் 2019இல் ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்ற தோற்க வேண்டிய ஆஷஸ் போட்டியில் தனி ஒருவனாக வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற வைத்தார். அதே வருடம் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையிலும் ஆல்-ரவுண்டராக அசத்திய அவர் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதனால் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் என்று அனைவராலும் போற்றப்படும் அளவுக்கு வளர்ச்சி கண்ட அவர் பணிச்சுமையால் மற்றொரு வீரரின் இடத்தை வீணடிக்கிறோம் என்ற எண்ணத்துடன் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து 31 வயதிலேயே வெளிப்படையாக ஓய்வு பெற்றது அதிர்ச்சியாக அமைந்தாலும் பாராட்டுகளைப் பெற்றது.

Stokes 2

நியூஸிலாந்தின் நாயகன்:
இப்படிப்பட்ட அட்டகாசமாக செயல்பட்டு நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ள அவரை பார்க்கும் ஒவ்வொரு முறையும் நியூசிலாந்து ரசிகர்கள் இவரை தவற விட்டுவிட்டோமே என்று ஏங்குகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து தோல்வியடையும் அளவுக்கு அவர் ஆட்டநாயகன் விருது வென்றதெல்லாம் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதைக்கு எடுத்துக்காட்டாகும்.

- Advertisement -

ஏனெனில் நியூஸிலாந்தில் பிறந்த அவர் 12 வயதில் இருக்கும் போது அவரது தந்தை கெரார்ட் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் ஒரு விளையாட்டு லீக் தொடரில் பயிற்சியாளராக வேலை செய்யும் வாய்ப்பை பெற்றதால் அவருடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அதன்பின் துர்ஹாம் அகடமியில் கிரிக்கெட் கற்ற அவர் நாளடைவில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி அதில் அசத்தலாக செயல்பட்டதால் சீனியர் அணிக்கு தேர்வாகி இன்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.

Taylor-2

நியூஸிலாந்துக்கு விளையாட:
ஆனால் பென் ஸ்டோக்ஸ் 18 வயதில் இருந்தபோது நியூசிலாந்துக்காக விளையாட விரும்பியதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் ராஸ் டைலர் அதை நியூசிலாந்து வாரிய தலைமை நிர்வாக இயக்குனரிடம் தெரிவித்த போதும் அவர் அதை தீவிரமாக நினைக்காமல் அசால்ட்டாக விட்டுவிட்டதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்தில் வெளியிட்டுள்ள தனது சுயசரிதை புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “அவர் (ஸ்டோக்ஸ்) 18 அல்லது 19 வயதில் ஒரு நியூசிலாந்தராக இருந்தார். ஒரு கின்னஸில் நியூசிலாந்துக்கு வந்து விளையாட விரும்புகிறீர்களா என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்”

- Advertisement -

“அதனால் இந்தப் பையன் நல்ல இளம் கிரிக்கெட் வீரர் என்றும் நியூசிலாந்துக்காக விளையாட ஆர்வமாக இருக்கிறார் என்ற செய்தியை நியூசிலாந்து வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்டின் வாகனுக்கு அனுப்பினேன். அதற்கு அவர் நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பாக செயல்படத் துவங்கினால் பார்ப்போம் என்று பதிலளித்தார். ஆனால் ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாட தொடங்கி விட்டதால் ஏணியின் கீழ் படிக்கட்டிலிருந்து (உள்ளூர் கிரிக்கெட்) தொடங்கினால் அவர் ஆர்வம் காட்ட மாட்டார் என்பதால் அதை விட அவருக்கு அதிகமான ஆதரவு வழங்க வேண்டும் என்று நான் மீண்டும் தலைமை நிர்வாகியிடம் கூறினேன்”

Stokes

“இருப்பினும் என்னுடைய 2வது பரிந்துரைக்கு எந்த பதிலும் வரவில்லை. ஆனால் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கு விளையாடுவதில் நேர்மையுடன் இருந்தார். எனவே நியூசிலாந்து வாரியம் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட்டு அவருக்கு சில உறுதியான உத்தரவாத ஆதரவுகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்ய தயாராகயில்லை” என்று கூறினார்.

தற்போது நியூசிலாந்தில் பிறந்தவர் என்றாலும் இங்கிலாந்துக்கு விளையாடுவதால் என்னை ஆங்கிலேயர் என்றழைக்கலாம் என சொல்லும் அளவுக்கு பென் ஸ்டோக்ஸ் தனது மனதை முழுமையாக இங்கிலாந்து கிரிக்கெட்டை நோக்கி மாற்றியுள்ளார். இருப்பினும் இப்போதும் நியூசிலாந்தில் உள்ள தனது உறவினர்களை பார்க்க அவ்வப்போது அங்கு அவர் செல்வது வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement