ராஜஸ்தான் அணியில் இணையும் மேட்ச் வின்னர். வேற லேவலாக மாறப்போகுது – உறுதி செய்த ஸ்மித்

Smith-1
- Advertisement -

தற்போது உலகில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக பார்க்கப்படுபவர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக ஆடி வருபவர். கடந்த நான்கு வருடத்தில் அந்த அணிக்காக கடுமையாக உழைத்து பல கோப்பைகைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இவரே.

Stokes

தற்போது அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் கேப்டன் ஆக மாறும் அளவிற்கு அவர் உயர்ந்துவிட்டார். சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இவர் தான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான இவர் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2018 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தாண்டு நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரில் முதலில் விலகுவதாக அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ். ஏனென்றால் அவருடைய அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றால் நியூசிலாந்துக்கு திரும்பி தன்னுடைய அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது அவருடைய அப்பாவின் உடல்நிலை சீரான காரணத்தினால் மீண்டும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள போவதாக தெரிகிறது.

stokes

34 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 635 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு சதமும் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். பென் ஸ்டோக்ஸ் இந்த அறிவிப்பு காரணமாக அவரது வருகை மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Stokes 1

மேலும் தான் நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டதை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாகவும் உறுதிசெய்துள்ளார். அவரின் வருகையை ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement