விக்கெட் இல்லை என்று தெரிந்தும் அம்பயரிடம் நக்கலை காட்டிய பென் ஸ்டோக்ஸ் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Stokes

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

cup

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கும். ஆனால் அந்த அத்தனை கணக்குகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை குவித்துள்ளது. துவக்கவீரர் ரோஹித் சர்மா 57 ரன்களையும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

stokes 1

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது முதல் இன்னிங்சின் நான்காவது ஓவரை துவக்க வீரர் கில் எதிர்கொண்டார். அந்த அவரின் ஒரு பந்தில் பந்து எட்ஜ் ஆகி இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த பென் ஸ்டோக்ஸ் கைகளுக்கு சென்றது. அப்போது அந்த கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா என்று டிவி அம்பயர் மூலம் பெரிய திரைவில் பார்த்த போது பந்து கீழே பட்டது தெரிந்தது. இதையடுத்து கில் நாட் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

ஆனால் அதனை எதிர்த்த ஸ்டோக்ஸ் அந்த முடிவை கேலி செய்யும் வகையில் நக்கலாக சிரித்தார். மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் மற்றும் பிராட் ஆகியோர் அம்பயரிடம் முறையிட்டனர் தெளிவாக தரையில் பட்ட ஒரு பந்திற்கு இப்படியா அவுட் கேட்டு நடந்துகொள்வீர்கள் என்பதுபோல இந்திய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளம் மூலமாக இங்கிலாந்து வீரர்களின் செய்த இந்த செயலை வர்ணித்து வருவது குறிப்பிடத்தக்கது.