வீடியோ : குருவை மிஞ்சிய கேப்டன், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அதிரடி உலக சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ் – ரசிகர்கள் பாராட்டு

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 16ஆம் தேதியன்று மவுண்ட் மவுங்கனி நகரில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முன்னதாக கடந்த வருடம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக இதே நியூசிலாந்து மண்ணில் பிறந்த பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இப்போட்டியிலும் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி 58.2 ஓவரிலேயே 325/9 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

அதிகபட்சமாக பென் டூக்கெட் 84 (68) ரன்களும் ஹரி ப்ரூக் 89 (81) ரன்களும் அதிரடியாக எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக நெயில் வேக்னர் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 1, கேன் வில்லியம்சன் 6, ஹென்றி நிக்கோலஸ் 4 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 77 ரன்களும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் டாம் ப்ளெண்டல் 19 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 138 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

ஸ்டோக்ஸ் உலக சாதனை:
அதனால் ஓரளவு தப்பிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 306 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் 4 விக்கெட்களும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் எடுத்தன. அதைத்தொடர்ந்து 19 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து முன்பை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு 374 ரன்கள் குவித்தது. ஜாக் கிராவ்லி 28, பென் டூக்கெட் 27, ஓலி போப் 49, ஜோ ரூட் 47, ஹரி ப்ரூக் 54, பென் போக்ஸ் 51 என களமிறங்கிய அந்த அணியின் அனைத்து வீரர்களும் கணிசமான ரன்களை எடுத்தனர்.

அவர்களுடன் தனது பங்கிற்கு 3 பவுண்டர் 2 சிக்சர்களை பறக்க விட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 31 (33) ரன்களை அதிரடியாக எடுத்தார். குறிப்பாக 2 சிக்ஸர்களை அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற தனது அணியின் தலைமைப் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பம் முதலே நிறைய போட்டிகளில் அதிரடியாக விளையாடுபவராக தன்னை அடையாளப்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 250 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்த அவர் ப்ரெண்டன் மெக்கல்லம், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்களை விட மிகவும் குறைந்த போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்து இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:
1. பென் ஸ்டோக்ஸ் : 109* (90 போட்டிகள்)
2. ப்ரெண்டன் மெக்கல்லம் : 107 சிக்ஸர்கள் (101 போட்டிகள்)
3. ஆடம் கில்கிறிஸ்ட் : 100 சிக்ஸர்கள் (96 போட்டிகள்)
4. கிறிஸ் கெயில் : 98 (103 போட்டிகள்)
5. ஜேக் காலிஸ் : 97 (166 போட்டிகள்)

இதையும் படிங்க:IND vs AUS : போய் ரூல்ஸ் படிச்சுட்டு வாங்க, விராட் கோலிக்கு தவறான அவுட் கொடுத்த அம்பயரை ஆதாரத்துடன் விளாசும் ரசிகர்கள்

அப்படி குருவை மிஞ்சிய சீஷ்யனாக சாதனை படைத்து தன்னை உலகின் மிக சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள பென் ஸ்டோக்ஸை ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள். இறுதியில் 394 என்ற வெற்றிலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து மீண்டும் டாம் லாதம் 15, டேவோன் கான்வே 2, கேன் வில்லியம்சன் 0, ஹென்றி நிக்கோலஸ் 7 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து திண்டாடி வருகிறது. அதனால் 3வது நாள் முடிவில் 63/5 என சரிந்த நியூசிலாந்து 331 ரன்கள் பின்தங்கி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

Advertisement